ஜார்ஜஸ் இலமேத்ர

ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் இலமேத்ர (பலுக்கல் 17 சூலை 1894 – 20 ஜூன் 1966) என்பவர் ஒரு பெல்ஜிய உரோமன் கத்தோலிக்க குருவும், வானியலாளரும் மற்றும் லூவேயின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஆவார். இவரே முதன் முதலில் அண்டம் விரிவாக்க கோட்பாட்டை '(expansion of the Universe) முன் மொழிந்தவர் ஆவார்.[1][2]. மேலும் இவரே முதன் முதலில் ஹபிள் விதியை நிறுவியவர். இவ்விதியை எட்வின் ஹபிள் வெளியிடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இவர் 1927இல் வெளியிட்டார்.[3][4][5][6]

ஜார்ஜஸ் இலமேத்ர
பிறப்பு(1894-07-17)17 சூலை 1894
பெல்ஜியம்
இறப்பு20 சூன் 1966(1966-06-20) (அகவை 71)
பெல்ஜியம்
தேசியம்பெல்ஜியர்
துறைஅண்டவியல்
வானியற்பியல்
பணியிடங்கள்லூவேயின் கத்தோலிக்க பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஅண்டம் விரிவாக்க கோட்பாடு
பெரு வெடிப்புக் கோட்பாடு
கையொப்பம்

இவரே முதன் முதலில் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை கூறியவர். ஆயினும் இவர் அதனை இப்பெயரில் அழைக்கவில்லை.[7][8]

இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கத்தோலிக்க குருவாக இருந்தவர்.

ஆதாரங்கள் தொகு

  1. http://www.nature.com/news/2011/110627/full/news.2011.385.html
  2. http://www.nature.com/nature/journal/v479/n7372/full/479171a.html#/ref2
  3. Sidney van den Bergh arxiv.org 6 Jun 2011 arXiv:1106.1195v1 [physics.hist-ph]
  4. David L. Block arxiv.org 20 Jun 2011 & 8 Jul 2011 arXiv:1106.3928v2 [physics.hist-ph]
  5. Eugenie Samuel Reich Published online 27 June 2011| Nature| எஆசு:10.1038/news.2011.385
  6. http://www.nature.com/nature/journal/v479/n7372/full/479171a.html
  7. A Science Odyssey: People and Discoveries: Big bang theory is introduced
  8. Lemaître - Big Bang
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜஸ்_இலமேத்ர&oldid=2486916" இலிருந்து மீள்விக்கப்பட்டது