ஜி. குப்புசாமி நாயுடு

ஜி. குப்புசாமி நாயுடு (G.Kuppuswamy Naidu, 1884-1942) இந்தியாவின் முன்னோடி தொழில் முனைவோர்களில் ஒருவராவர்.[1] இவர் 1910ல் கோயமுத்தூர் நகரத்தில், பருத்தி பஞ்சு மூலம் நூல் மற்றும் துணி தயாரிக்கும் லெட்சுமி ஆலையை நிறுவினார்.[2]

பின்னர் உடுமலைப் பேட்டை மற்றும் கோவில்பட்டி நகரங்களில் லெட்சுமி ஆலையின் கிளைகளை நிறுவினார்.

விசைத்தறிகளையும், நெசவாலைகளுக்குத் தேவையான உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்ய லெட்சுமி மெசின் ஒர்கஸ் (LMW) எனும் தொழிற்சாலையை கோயம்புத்தூர், பாப்பநாயக்கன் பாளையத்தில் நிறுவினார். மேலும் ஏழை மக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைத்துக் கொடுத்தார்.

குடும்பம் தொகு

ஜி. குப்புசாமி நாயுடுவின் மகன்கள் ஜி. கே. தேவராஜுலு மற்றும் ஜி. கே. சுந்தரம் ஆவார். இவரது மகன்கள், லெட்சுமி ஆலை நிறுவனத்தை மேம்படுத்தினர்.

மேற்கோள்கள் தொகு

  1. "History of Lakshmi Mills". Lakshmi Mills. Archived from the original on 20 August 2010. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  2. Lakshmi Mills: http://www.lakshmimills.com/history.html பரணிடப்பட்டது 2010-08-20 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._குப்புசாமி_நாயுடு&oldid=3860131" இலிருந்து மீள்விக்கப்பட்டது