ஜெயா மகேஷ்

இந்திய வடிவழகி

ஜெயஸ்ரீ சந்திரமோகன் (Jayashree Chandramohan) பரவலாக ஜெயா மகேஷ் என அறியப்படும் இவர் ஓர் இந்திய அலங்கார வடிவழகி மற்றும் உடற் சிற்ப சிகிச்சை நிபுணர். இவர் தமிழகத்தில் உள்ள  கோயம்புத்தூரில் பிறந்தார். குடும்பத் தலைவியாக இருந்த இவர் குழந்தைப் பேறுக்குப் பின்னர் ஏற்பட்ட சில உடல் பிரச்சினைகளில் இருந்து மீண்டு[1] முதன்மை வடிவழகியாகவும் ஒர் உடற் சிற்ப சிகிச்சை நிபுணராகவும் ஆனார்[2]. அலங்கார வடிவழகியாக இருந்த அதே சமயத்தில்ல் பல அழகிப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். மேலும் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற மிசஸ் இந்தியா எர்த் கிளாசிக் போட்டியில் இவர் வாகையாளராகத் தேர்வானார். [3]

குடும்பம் தொகு

ஜெயா மகேஷ் இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோவையில் பிறந்தார். இவர் அங்குள்ள இ ஆர் ஜி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். மேலும் அங்குள்ள பி எஸ் ஜி ஆர் கிருட்டிணம்மாள் கல்லூரியில் இவர் பி. காம் இளநிலைப் பட்டம் பயின்றார்.1995 ஆம் ஆண்டில் ஜி. மகேஷ் குமார் எனும் தொழில் முனைவோரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு சஞ்சனா எம் குமார் எனும் ஒரு மகள் உள்ளார்.

தொழில் வாழ்க்கை தொகு

இவர் பேறுகாலத்திற்குப் பிறகான பேறுகால வதை மற்றும் எடை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டார்.[4] பேறுகாலத்திற்குப் பிறகு சுமார் 110 கிலோ அளவிற்கு அதிகமாக எடை கூடினார். வழக்கத்திற்கு மாறான இந்த எடை அதிகரிப்பால் இவருக்கு கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. தன்னுடைய சொந்த பிரச்சினைகளில் இருந்து தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளின் உதவியால் மீண்டு வந்ததாக இவர் கூறியுள்ளார்.[5] மேலும் இவர் தனக்கான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளை தானே வடிவமைத்துக் கொண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற மிசஸ் கோவை பட்டம் வென்றார். 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற மிசஸ் இந்தியா எர்த் கிளாசிக் போட்டியில் வாகையாளராகத் தேர்வானார். [6] மேலும் கலிபோர்னியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் இவர் மூன்றாம் இடம் பெற்றார். அந்தப் போட்டியில் மிசஸ் போட்டோஜெனிக் பட்டம் பெற்றார்.[7]

சமூகப் பணிகள் தொகு

கலாம் நூலகம் அமைப்பதில் இவர் ஈடுபட்டார்.[8] பிப்ரவரி 2017 இல் போபால் MANM தேசிய மாநாட்டில்  உடற்செயல் குறைதல் தடுத்தல் பற்றி ஜெய மகேஷ் உரையாற்றினார். இந்த மாநாட்டில் உடற்செயல் குறைதல் தடுப்பில் சமூகத்தின் பங்கு எனும் தலைப்பில் அவர் உரை நிகார்[9].

விருதுகள் மற்றும் அங்கீகாரம் தொகு

அலங்கார வடிவழகியாகவும் உடற் சிற்ப சிகிச்சை நிபுணராகவும் இருந்த அதே சமயத்தில் பல அழகிப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2006  ஆம் ஆண்டில் மிசஸ் கோயம்புத்தூர் எனும் பட்டம் பெற்றார். இதுவே இவர் பெற்ற முதல் அழகிப் பட்டமாகும்.  2016 இல் மிசஸ் இந்தியா எர்த் கிளாசிக் எனும் பட்டம் பெற்றார்.[10]  2018 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் இவர்மூன்றாம் இடம் பெற்றார். அந்தப் போட்டியில் மிசஸ் போட்டோஜெனிக் பட்டம் பெற்றார். 2019 இல் கோயம்புத்தூர் பேஷன் ஐகான் விருதினையும்.  அதே ஆண்டில் கோவி வொண்டர் வுமன் ஐகான் எனும் விருது பெற்றார்.

சான்றுகள் தொகு

  1. "City's fitness therapist crowned 'Mrs India Earth' - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/Citys-fitness-therapist-crowned-Mrs-India-Earth/articleshow/54666469.cms. 
  2. "This Beauty Queen Who Bagged The ‘Mrs. India’ Title Once Weighed A Whopping 118 Kilos; Here’s How She Went From Being Fat To Fit" (in en). dailybhaskar. 2017-02-13. https://daily.bhaskar.com/news/TOP-mrs-india-jaya-mahesh-5527717-PHO.html. 
  3. INDIA, MRS. "Mrs INDIA Earth ® | 2017". www.mrsindiaearth.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
  4. "This Beauty Queen Who Bagged The ‘Mrs. India’ Title Once Weighed A Whopping 118 Kilos; Here’s How She Went From Being Fat To Fit" (in en). dailybhaskar. 2017-02-13. https://daily.bhaskar.com/news/TOP-mrs-india-jaya-mahesh-5527717-PHO.html. 
  5. "An Awe-Inspiring Woman Achiever - Jaya Mahesh". http://www.shopzters.com/blogs/best-of-best/an-awe-inspiring-woman-achiever-jaya-mahesh. 
  6. https://www.thehindu.com/life-and-style/jaya-mahesh-returns-from-the-mrs-globe-classic-pageant-with-many-accolades/article24231080.ece
  7. https://www.thehindu.com/life-and-style/jaya-mahesh-returns-from-the-mrs-globe-classic-pageant-with-many-accolades/article24231080.ece
  8. "Arc Foundation launches its second phase of Dr. Kalam Library at Corporation School for deaf, RS Puram" (in en). simpli-city.in. http://simpli-city.in/news-detail.php?nid=11199&isnotify=n. 
  9. "National conference on drowning prevention organised". thehitavada.com. Archived from the original on 2019-01-26. பார்க்கப்பட்ட நாள் 2019-01-26.
  10. INDIA, MRS. "Mrs INDIA Earth ® | 2017". www.mrsindiaearth.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயா_மகேஷ்&oldid=3573314" இலிருந்து மீள்விக்கப்பட்டது