ஜெய வர்மா சின்கா
ஜெய வர்மா சின்கா (Jaya Varma Sinha) நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின்படி, 1 செப்டம்பர் 2023 முதல் இந்திய இரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக பணியேற்றார்.[1] [2][3]வரலாற்றில் இவரே இந்திய இரயில்வே வாரியத்தின் முதல் தலைவர் ஆவார்.
கல்வி & பணி தொகு
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜெய வர்மா சின்கா, 1988ல் இந்திய இரயில்வேயின் போக்குவரத்துச் சேவையில் (Indian Railway Traffic Service) அதிகாரியாகச் சேர்ந்தார். [4] இந்தியாவின் கொல்கத்தா நகரத்தையும், வங்காளதேசத்தின் டாக்கா நகரத்தையும் இணைக்கும் 375 கிலோ மீட்டர் நீள மைத்திரீ விரைவுவண்டிக்கான திட்டத்தை நிறைவேற்றியதில் ஜெய வர்மா சின்கா முக்கியப் பங்கு வகித்தார்.[5] பிப்ரவரி 2022ல் ஜெய வர்மா சின்கா இரயில்வே வாரியத்தின் (செயல்பாடுகள் & வணிக மேம்பாடு) உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் கூடுதல் உறுப்பினராக (போக்குவரத்து) செயல்பட்டார்.[6]
2023 ஒடிசா தொடருந்து விபத்து தொகு
2023 ஒடிசா தொடருந்து விபத்தின் போது[7][8]இரயில்வே வாரிய உறுப்பினராக இருந்த ஜெய வர்மா சின்கா விபத்துகளுக்கான காரணங்களை விளக்கினார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ ரயில்வே வாரியத்தின் 105 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நியமனம்
- ↑ யார் இந்த ஜெயா வர்மா சின்ஹா? ரயில்வே வாரிய வரலாற்றில் முதல் பெண் தலைவர்!
- ↑ "Govt appoints Jaya Verma Sinha as first woman CEO, chairperson of Railway Board". livemint.com. 31 August 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
- ↑ "Jaya Varma Sinha will be new Chairman Railway Board". economictimes.indiatimes.com. 31 August 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
- ↑ "Railway Board Gets First-Ever Woman CEO And Chairperson". ndtv.com. 31 August 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
- ↑ "Jaya Varma takes charge of Member (Operations & Business Development), Railway Board". metrorailtoday.com. 11 February 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
- ↑ "Odisha train accident Government revises death toll down to 275; Railways seeks CBI probe". thehindu.com. The Hindu. 4 June 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
- ↑ "Odisha train tragedy: Railway Board member Jaya Verma Sinha explains what happened on the night of the crash". indiatoday.in. India Today. 5 June 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.