ஜேம்ஸ் டூயி வாட்சன்

ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) (பிறப்பு - 1928), அமெரிக்கப் பேராசிரியரும் உயிரியலாளரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கேவண்டிஷ் ஆய்வகத்தில், பிரான்சிஸ் க்ரிக்குடன் இணைந்து (1951) டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராயும் பணியில் ஈடுபட்டார். (எம். ஹெச். எஃப் வில்கின்ஸின் ஊடு-கதிர் விளிம்பு விளைவு ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு செய்யபட்ட) இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் 1953ல் ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 1962ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசை க்ரிக், வில்கின்ஸ் ஆகியோருடன் இணைந்து வாட்சன் பெற்றுக்கொண்டார்.1989 முதல் 19992 வரை (அமெரிக்க) தேசிய மனித மரபணு ரேகை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். மரபியல், பாக்டீரியா திண்ணி மற்றும் புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சித் துறைகளில் வாட்சன் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார்.

ஜேம்ஸ் டூயி வாட்சன்
James Dewey Watson Edit on Wikidata
பிறப்புJames Dewey Watson
6 ஏப்பிரல் 1928 (அகவை 96)
சிகாகோ
படித்த இடங்கள்
பணிஉயிரியல் அறிஞர், மரபியலர், விலங்கியலார், உயிர் வேதியியலாளர், அணுத்திரள் உயிரியலாளர், கல்வியாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், வேதியியலாளர், இயற்பியலறிஞர், எழுத்தாளர்
வேலை வழங்குபவர்
சிறப்புப் பணிகள்Molecular Biology of the Gene, The Double Helix
விருதுகள்கோப்ளி பதக்கம், Lomonosov Gold Medal, Albert Lasker Award for Basic Medical Research, Knight Commander of the Order of the British Empire, மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, Guggenheim Fellowship, தேசிய அறிவியல் பதக்கம், honorary doctor of the Autonomous University of Barcelona, Foreign Member of the Royal Society, Mendel Medal, Masaryk University Gold Medal, honorary doctor of the Hofstra University, Guggenheim Fellowship, Othmer Gold Medal
கையெழுத்து

மேலும் படிக்க தொகு

வெளியிணைப்புகள் தொகு

அருஞ்சொற்பொருள் தொகு

  • பாக்டீரியா திண்ணி - Bacteriophage
  • மனித மரபணு ரேகை - Human genome
  • ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம் - Deoxy ribo nucleic acid
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_டூயி_வாட்சன்&oldid=3773268" இலிருந்து மீள்விக்கப்பட்டது