ஜோ அண்ட் ஜோ

இந்திய மலையாளத் திரைப்படம்

ஜோ அண்ட் ஜோ (Jo and Jo) என்கிற மலையாள படத்தை அறிமுக இயக்குனர் அருண் டி ஜோஸ் இயக்கியுள்ளார். இது ஒரு இந்திய மலையாள மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும் . இமேஜின் சினிமாஸ் மற்றும் சிக்னேச்சர் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. ரவீஷ் நாத்துடன் அருண் எழுதிய இந்தப் படத்தில் நிகிலா விமல், மேத்யூ தாமஸ், நஸ்லன் கே. கஃபூர் மற்றும் மெல்வின் ஜி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.[1] இந்த படம் 13 மே 2022 அன்று வெளியிடப்பட்டது. இந்த படமானது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, எனவே வணிக ரீதியாக வெற்றி பெற்ற படமாக கருதப்படுகிறது.

கதை தொகு

கதாநாயகி ஜோமோல், பேபி மற்றும் லில்லி தம்பதிக்கு பிறந்த மூத்த மகள். இவர்களுக்கு இரண்டாவதாக பிறந்த குழந்தை ஜோமோன். தனது தம்பி ஒரு ஆண் பிள்ளை என்பதால் தன் பெற்றோர்கள் அவரை அதிகம் விரும்புவதாக ஜோமோல் நினைக்கிறார். ஜோமோன் ஒரு கவலையற்ற குணம் கொண்ட நபர் மற்றும் அவருக்கும் அவரது அக்களாளுகும் இடையிலான அதிகாரப் போட்டிக்கு வரும்போது அவர் தனது ஆணாதிக்க தனத்தை வெளிப்படுத்த கூடியவர். ஜோமோல் தனது கூரிய அறிவினால் ஜோமோனின் ஒவ்வொரு சிறு குறும்புகளையும் கண்டுபிடித்து, அவர்களின் பெற்றோரிடம் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தும் அவர்களுக்கிடையில் விரிசலை உருவாக்குகின்றன. இதற்கிடையில், அவர்களின் வீட்டிற்கு ஒரு காதல் கடிதம் வருகிறது. அவர்கள் இருவரும் அந்தக் கடிதம் மற்ற நபருக்காக எழுதப்பட்டதாக நினைக்கிறார்கள். மேலும் அவர்கள் இருவரும் கடிதத்தின் பின்னால் உள்ள முழு கதையையும் ஆதாரத்துடன் அவிழ்க்க முயற்சிக்கிறார்கள். இப்படி தான் கதை நகர்கிறது. இந்த கதைக்களத்தில் ஜோமோல் மீதான மனோஜின் விருப்பம், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் போது எபி தனது காதலி நிம்மியைச் சந்திக்கும் திட்டம் போன்றவையும் அடங்கும். மேலும் இந்த படத்தில் ஆணாதிக்கம் குறித்தும், பெண்ணியம் குறித்தும் எளிய முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர்கள் தொகு

  • ஜோமோல் பேபியாக நிகிலா விமல்
  • ஜோமோன் பேபியாக மேத்யூ தாமஸ்
  • மனோஜ் சுந்தரனாக நஸ்லென் கே.கபூர்
  • எபி குருவில்லாவாக மெல்வின் ஜி பாபு
  • சாகர் சூர்யாவாக துட்டு (பரிஷ்காரி)
  • பேபி பலதாராவாக ஜானி ஆண்டனி
  • லில்லிக்குட்டி பேபியாக ஸ்மினு சிஜோ
  • அன்னம்மாவாக லீனா ஆண்டனி
  • மனோஜின் மூத்த மாமாவாக ஹரீஷ் பென்கன்
  • நிம்மியாக சானியா பாபு (மெல்வினின் காதல் விருப்பம்)
  • கடக்காரனாக சந்தோஷ் லக்ஷ்மன்
  • இந்துவாக சமீரா சாபு
  • ஜோமோனின் திருமணப் பெண்ணாக அஞ்சனா அசோகன் (எல்லோலம் தாரி பாடல்)
  • உறுப்பினர் ஷிபுவாக பினு அடிமாலி
  • சப் இன்ஸ்பெக்டராக ஸ்ரீஜித் ரவி
  • இந்துவின் தந்தை சாஜியாக கலாபவன் ஷாஜோன் (கேமியோ தோற்றம்)

தயாரிப்பு தொகு

இந்த படம் குறித்த அறிவிப்பு செப்டம்பர் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் பார்வை சுவரிதழை நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் மேத்யூவின் பிறந்தநாளான அக்டோபர் 16 அன்று வெளியிட்டார். 

வெளியீடு தொகு

இப்படம் 13 மே 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

வீட்டு ஊடகம் தொகு

இந்த படத்தின் எண்ம உரிமையை அமேசான் பிரைம் மீடியா வாங்கியுள்ளது மற்றும் இது 10 ஜூன் 2022 அன்று முதல் அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக தொடங்கியது.[சான்று தேவை]

இசை தொகு

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார், சுஹைல் கோயா மற்றும் டிட்டோ தங்கச்சன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. Antony, Meriya (24 September 2021). "Nikhila Vimal, Mathew Thomas and Naslen to lead Jo and Jo". Onlookers Media. பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_அண்ட்_ஜோ&oldid=3713690" இலிருந்து மீள்விக்கப்பட்டது