ஞாழல்
Senna sophera
ஞாழல் விதைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Caesalpinioideae
சிற்றினம்:
Cassieae
துணை சிற்றினம்:
Cassiinae
பேரினம்:
இனம்:
S. sophera
இருசொற் பெயரீடு
Senna sophera
(Linn.) Roxb
வேறு பெயர்கள்

Cassia sophera

ஞாழல் மரம், பொன்னாவரசு அல்லது புலிநகக் கொன்றை (ஆங்கிலத்தில் tigerclaw tree; Cassia Sophera / Senna sophera) என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. இதன் பூக்கள் ஐயவி என்னும் வெண்சிறு கடுகு போல் இருக்கும்.[1]

எல்லா நிலங்களிலும் பூக்கும் என்றாலும் நெய்தல் நிலத்தில் மிகுதி.

கானலில் பூக்கும்.[2][3]
மணிபல்லவத்தீவில் கடலோரம் இருந்த இலஞ்சியில் ஞாழலும் பூத்திருந்தது [4]
உடன் வளரும் மரங்கள் - செருந்தி [5] புன்னை [6] தாழை [7] மா [8]

நிறம் தொகு

இரு நிறங்களில் பூக்கும்

பொன்னிறத்தில் பூக்கும்.[9], காதலன் பிரிவால் காதலி மேனியில் ஞாழல் பூப்போல பசப்பு தோன்றிற்றாம் [10]
செந்நிற ஞாழலின் கிளைகள் கருநிறம் கொண்டவை.[11] ஞாழல் ஏனோன்(சாமன்) நிறத்தில் (செந்நிறத்தில்) பூக்கும்,[12]

மணம் தொகு

ஞாழல் மணம் கமழும் நறுமலர் [13][14]

சூடும் பூ தொகு

குறிஞ்சிநில மகளிர் ஞாழல் மலர்க் கொத்தைக் கூந்தலில் சூடிக்கொள்வர்.[15]
மகளிர் விரும்பிச் சூடுவதால் இதற்குக் ‘குமரிஞாழல்’ என்னும் பெயர் உண்டு.[16]
இதனால் கன்னிஞாழல் என்னும் பெயரும் உண்டு.[17] :மீனவர் நிலப்பூ ஞாழலையும், நீர்ப்பூ நீலத்தையும் தலையில் சூடிக்கொள்வர்.[18] ஞாழலையும், நெய்தலையும் சூடிக்கொள்வர்.[19]

பூ விளக்கம் தொகு

ஞாழல் மலருக்குத் தரப்பட்டுள்ள அடைமொழிகள் ஞாழலின் தன்மையை உணர்த்துகின்றன.

சிறு வீ ஞாழல் [20]
நறுவீ ஞாழல் [21]
நறுமலர் ஞாழல் [22]
பன்மாண் புதுவீ ஞாழல் [23]
பசுநனை ஞாழல் [24]
தண்ணிய கமழும் ஞாழல் [25]
நனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள்வீ [26]
இணர் ததை ஞாழல் [27]
குவி இணர் ஞாழல் [28]
தெரியிணர் ஞாழல் [29]

பயன்பாடு தொகு

  • ஞாழலால் தழையாடை புனைவர்.[30]
  • ஞாழல் மரத்தில் தாழைநார்க் கயிற்றில் ஊஞ்சல் ஆடினர்.[31]
  • கடலாடு மகளிர் ஞாழலைக் கொய்துகொண்டு சென்று விளையாடுவர்.[32]
  • ஞாழலில் கடற்காக்கைகள் கூடு கட்டும்.[33]
  • ஞாழல் சங்ககால மகளிர் குத்து விளையாடிய பூக்களில் ஒன்று.[34]
  • வையையாறு அடித்துக்கொண்டு வந்த மலர்களில் ஞாழலும் ஒன்று.[35]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் - குறுந்தொகை 50
  2. இள மணல் தண் கழிக் கானல்வாய்ப் பூவா இள ஞாழல் போது. திணைமாலை 39,
  3. கானல் இடை எலாம், ஞாழலும் தாழையும்; ஆர்ந்த புடை எலாம், புன்னை; திணைமாலை 58
  4. மணிமேகலை 8-6
  5. ஐங்குறுநூறு 141,
  6. ஐங்குறுநூறு 103,
  7. அகநானூறு 180-12,
  8. தாழை, மா ஞாழல், ததைந்து உயர்ந்த தாழ் பொழில் திணைமாலை 44,
  9. பொன்வீ ஞாழல் - அகநானூறு 70-9
  10. கலித்தொகை 131-19,
  11. செவ்வீ ஞாழல் கருங்கோட்டு இருஞ்சினை - அகநானூறு 240-1,
  12. காமன் கருநிறம். சாமன் செந்நிறம். கலித்தொகை 26-4,
  13. ஞாழல் மணம் கமழ் நறுவீ நற்றிணை 267,
  14. எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினை - ஐங்குறுநூறு 150,
  15. கலித்தொகை 56-2,
  16. கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் - நற்றிணை 54-9,
  17. குயில் பயிரும் கன்னி இள ஞாழல் பூம் பொழில் திணைமொழி 49-3,
  18. அகநானூறு 270-3,
  19. அகநானூறு 370-9,
  20. குறுந்தொகை 50, 328, நற்றிணை 31, 74, 96, 191, 311, 315
  21. குறுந்தொகை 318,
  22. நற்றிணை 106,
  23. நற்றிணை 167,
  24. குறுந்தொகை 81,
  25. குறுந்தொகை 310,
  26. குறுந்தொகை 397,
  27. பதிற்றுப்பத்து 30-1,
  28. பதிற்றுப்பத்து 51-5
  29. கலித்தொகை 127-1
  30. ஐங்குறுநூறு 191
  31. அகநானூறு 20-5,
  32. அகநானூறு 216-8,
  33. ஐங்குறுநூறு 169,
  34. குறிஞ்சிப்பாட்டு 81
  35. பரிபாடல் 12-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாழல்&oldid=2190899" இலிருந்து மீள்விக்கப்பட்டது