டால்மேசன் (நாய்)

இடால்மேசன் (Dalmatian) என்பது ஒரு வகை நாய் ஆகும். இதன் பூர்வீகம் குரோவாசியா ஆகும்.[1] இதன் உடலில் திட்டு திட்டாக காணப்படும் கறுப்பு வெள்ளைப் புள்ளிகள் இதன் சிறப்பு அம்சமாகும். பண்டைக் காலத்தில் சுமை இழுக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் இது குடும்பத்தினரோடு பழகுவதற்கு சிறந்த நாய் என கருதப்படுகிறது.

டால்மேசன்
டால்மேசன்
தோன்றிய நாடு குரோவாசியா
தனிக்கூறுகள்
மேல்தோல் வெள்ளை பின்புலம்
நிறம் கறுப்பு வெள்ளை புள்ளிகள்
வாழ்நாள் 10–13 வருடங்கள்
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

உடல் தொகு

இது நடுத்தரமான உடல்வாகு கொண்டது. இதன் எடை 16 கிலோகிராம் முதல் 32 கிலோகிராம் வரை இருக்கும்.இதன் உயரம் சுமார் 48 முதல் 61 செண்ட்டி மீட்டர் ஆகும். ஆண் நாயானது பெண் நாயை விட சற்று பெரியதாக இருக்கும்.[2] இதன் கால் நகங்கள் வெள்ளையாக இருக்கும்.இதன் கண்கள் நீலம் அல்லது பழுப்பு வண்ணத்தில் இருக்கும். சில நாய்களுக்கு ஒரு கண் நீலமாகவும் மற்றொரு கண் பழுப்பு வண்ணத்தில் இருக்கும்.[3]

பயன்கள் தொகு

இது சிலசமயங்களில் மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.மேலும் பாதுகாவலாகவும் , விளையாட்டுப் பயிற்சித் துணையாகவும் , தீயணைப்புப் பிரிவிலும் பயன்படுகிறது.

உசாத்துணை தொகு

  1. "Croatian Kennel Club". Hks.hr. 30 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-05-22.
  2. "American Kennel Club – Dalmatian". Akc.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-26.
  3. Thornton, Kim Campbell. "THE DALMATIAN." Dog World 89.11 (2004): 24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டால்மேசன்_(நாய்)&oldid=3507661" இலிருந்து மீள்விக்கப்பட்டது