டிங்சன் நடவடிக்கை

டிங்சன் நடவடிக்கை (Operation Dingson) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

டிங்சன் நடவடிக்கை
நார்மாண்டி படையிறக்கம் பகுதி
நாள் ஜுன் 5-18, 1944
இடம் தெற்கு பிரிட்டானி, பிரான்சு
கீழ்நிலை உத்தியளவில் யாருக்கும் வெற்றியில்லை

மேல்நிலை உத்தியளவில் நேசநாட்டு வெற்றி

பிரிவினர்
பிரான்சு பிரெஞ்சு எதிர்ப்புப்படைகள்
 ஜெர்மனி

ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் மீதான நேசநாட்டுப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் ஆரம்பித்தது. இப்படையெடுப்பு துவங்க சில மணி நேரங்கள் முன்னர் (ஜூன் 5 நள்ளிரவில்) பிரிட்டானிய சிறப்பு வான்சேவை (Special Air Service)[1] வீரர்களும் பிரெஞ்சு வான்குடை வீரர்களும் பிரான்சின் பிரிட்டானி பகுதியின் வான்வழியே வான்குடைகள், மிதவை வானூர்திகள் மூலம் தரையிறங்கினர். நார்மாண்டி போர்களத்திற்குச் செல்லும் ஜெர்மானிய பீரங்கிப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பது இவர்கள்து நோக்கம். உள்ளூர் பிரெஞ்சு எதிர்ப்புப் படையினருடன் சேர்ந்து ஜெர்மானிய போக்குவரத்தின் மீதும் அரண்நிலைகளின் மீதும் தாக்குதல் நடத்தினர். அடுத்து சில வாரங்களுக்கு ஜெர்மானியப் படைநிலைகளின் உட்பகுதியில் குழப்பத்தை விளைவித்தனர். ஜூன் 18ம் தேதி அவர்களது தலைமையகத்தை ஜெர்மானியப் படைகள் கண்டுபிடித்து தாக்கியதால் டிங்சன் நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. பெயர் வான்சேவை என்றிருந்தாலும் இது ஒரு சிறப்பு கமாண்டோ படைப்பிரிவு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிங்சன்_நடவடிக்கை&oldid=2975669" இலிருந்து மீள்விக்கப்பட்டது