டி.தொரெச்சு

இந்திய நாட்டின் நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் அரசியல்வாதி

டி. தொரெச்சு (T.Torechu) என்பவர் இந்திய நாட்டின் நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1948 ஆம் ஆண்டு பிறந்தார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று இறந்தார். நாகாலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த இவர் நாகாலாந்து சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

டி. தொரெச்சு
நாகாலாந்து சட்டமன்றம்
பதவியில்
2003 – 16-டிசம்பர்-2019
முன்னையவர்ஆர்.எல். அகம்பா
தொகுதிபுங்ரோ கிபிரே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1948
இறப்பு16-டிசம்பர்-2019 (வயது 71)
அரசியல் கட்சிநாகாலாந்து மக்கள் முன்னணி

சுயசரிதை தொகு

அரசியலில் சேருவதற்கு முன்பு டோரெச்சு அரசு ஆசிரியராக இருந்தார்.[1] 2003 ஆம் ஆண்டில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராக புங்க்ரோ கிஃபிரேவிலிருந்து நாகாலாந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர், இவர் நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியில் சேர்ந்தார். , 2013 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் புங்க்ரோ கிஃபிரே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]

டி. தொரெச்சு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று தனது 71வது வயதில் இறந்தார். [1][6][7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "NPF legislator T. Torechu passes away; state funeral today". Nagaland Post. 16 December 2019. Archived from the original on 17 December 2019. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  2. "Nagaland Assembly Election Results in 2003". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  3. "Nagaland Assembly Election Results in 2008". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  4. "Nagaland Assembly Election Results in 2013". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  5. "Nagaland Assembly Election Results in 2018". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  6. "Current Nagaland MLA dies at Dimapur based Hospital; many condole his dead". Nagaland Express. 16 December 2019. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  7. "Nagaland MLA dies". Business Standard India. Press Trust of India. 16 December 2019. https://wap.business-standard.com/article/pti-stories/nagaland-mla-dies-119121601548_1.html. பார்த்த நாள்: 17 December 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி.தொரெச்சு&oldid=3864858" இலிருந்து மீள்விக்கப்பட்டது