டி. எம். ஜெயமுருகன்

டி.எம். ஜெயமுருகன் (T. M. Jayamurugan) ஓர் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ் மொழி திரைப்படங்களை இயக்கியுள்ளார். ரோஜா மலரே (1997) என்ற திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். மேலும் அடடா என்ன அழகு (2009) மற்றும் தீ இவன் (2023) ஆகிய நாடகங்கள் உட்பட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

தொழில் தொகு

ஜெயமுருகன் தனது தயாரிப்பு நிறுவனமான மனிதன் சினி ஆர்ட்சு நிறுவனம் மூலம் சிந்து பாத் (1995) படத்தை தயாரித்து தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் முதலில் நுழைந்தார்.[1] முரளி, அருண் பாண்டியன் மற்றும் ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ரோஜா மலரே (1997) என்ற காதல் நாடகத் திரைப்படத்தின் மூலம் ஜெயமுருகன் இயக்குநராக அறிமுகமானார். படம் வெளியாவதற்கு முன்பே, செயின்ட் மேரிசு தீவுகளில் படப்பிடிப்பிற்காக படம் கவனத்தை ஈர்த்தது.[2] திரைப்படம் வெளியானதும், திரைப்பட விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[3] 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இவர் லிவிங்சுடன், உதயா மற்றும் விந்தியாவுடன் பூங்குயிலே என்ற படத்தைத் தயாரித்தார். அது பல அட்டவணைகளுக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்டது.[4][5]

திரைபடவியல் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Balu, Aparajitha (25 February 2020). "Actor Karthik Turns Hero Once Again For 'Thee Ivan'". Silverscreen India.
  2. "A-Z (V)". Indolink. Archived from the original on 24 April 2013.
  3. "Movie Review - Roja Malare". Indolink. Archived from the original on 29 June 2001.
  4. "Poonguyile". Chennai Online. Archived from the original on 24 August 2004.
  5. "Tamil: On The Sets". Indiainfo. Archived from the original on 27 June 2001.
  6. ‘தீ இவன்’ படத்திற்காக நவரசம் காட்டியிருக்கும் நாயகன் கார்த்திக்..!, touringtalkies.co, பார்த்த நாள் 2021, மார்ச், 14

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._ஜெயமுருகன்&oldid=3956530" இலிருந்து மீள்விக்கப்பட்டது