டெய்லர் பனியாறு

டெய்லர் பனியாறு (Taylor Glacier) என்பது தென்முனைக் கடலில் (அன்ட்டார்டிக்காவில்) உள்ள 54 கிமீ நீளமுள்ள பனியாறு அல்லது பனிப்பையாறு. இது விக்டோரியா நிலம் என்னும் சமதளப் பகுதியில் இருந்து புறப்பட்டு டெய்லர் பள்ளத்தாக்கின் மேற்கு எல்லை நோக்கிப் பாய்கின்றது. டெய்லர் பள்ளத்தாக்கு குக்ரி குன்றுகளுக்கு (Kukri Hills) வடக்காகவும்,ஆசுகார்டு தொடர்ச்சிக்கு (Asgard Range) தெற்காகவுமுள்ளது. பனியாற்றின் நடுப்பகுதி வடபுறம் இன்லாந்து கோட்டைகள் (Inland Forts) என்னும் பகுதியாலும் தென்புறம் பீக்கன் பள்ளத்தாக்காலும் (Beacon Valley) எல்லையாக சூழப்பட்டுள்ளது.

வகைபூமிமுனை பனியாறு
அமைவிடம்தென்முனைக் கடல் அல்லது அன்ட்டார்டிக்கா
ஆள்கூறுகள்77°44′S 162°10′E / 77.733°S 162.167°E / -77.733; 162.167
முடிவிடம்Moraine, a small section of the glacier flows into Lake Bonney.
நிகழ்நிலைStable

இந்தப் பனியாற்றை 1901-1904 காலப்பகுதியில் நிகழ்ந்த பிரித்தானிய தேசிய அன்ட்டார்டிக் புதுப்புலத் தேடுசெலவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது ஃவெரார் பனியாற்றின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டது.

இந்த பனியாற்றைக் கண்டு பிடித்தவர்களில் ஒருவராகிய புவியில் ஆய்வாளர் கிரிஃவித் டெய்லர் (Griffith Taylor) இங்கே எதிர்பாராத விதமாக வெண்பனியிடையே சிவப்பு நிறத்தில் தென்பட்ட பனியருவிபோல் காட்சியளித்த குருதியருவி (Blood Falls) என்று பின்னர் பெயரிடப்பட்ட ஒரு பகுதியை முதன் முதலில் கண்டு பிடித்தார். இப்பகுதியை நாசா நிலப்படத்தில் காணலாம்[1]. இந்த டெய்லர் பனியாற்றில் இருந்து பாயும் குருதியருவியில் புற உலகோடு தொடர்பு கொள்ளாமலும் ஆக்சிசன் தேவை இல்லாமலும், ஒளிச்சேர்க்கை நடக்காமலும் கந்தகம், இரும்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சில புதுவகை நுண்ணுயிரிகள் (பாக்டீரியா) 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கும் கூடுதலான காலம் வாழிடமாகக் கொண்டு வாழ்ந்துள்ளதாக ஏப்ரல் 2009 இல் கண்டுபிடிக்கப்பட்டுளது[2]

இவற்றையும் பார்க்கவும் தொகு

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. டெய்லர் பனியாறும் அதன் நுனியில் உள்ள குருதியருவியும் காட்டும் படம்
  2. Mikucki, Jill. A. et al., A Contemporary Microbially Maintained Subglacial Ferrous “Ocean”, SCIENCE VOL 324 17 APRIL 2009

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெய்லர்_பனியாறு&oldid=3214678" இலிருந்து மீள்விக்கப்பட்டது