டெருயெல் பெருங்கோவில்

டெருயெல் பெருங்கோவில் (Cathedral of Teruel) என்பது எசுப்பானியாவில் டெருயெல் எனும் இடத்தில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிகப் பெருங்கோவில் ஆகும். இவ்வாலயம் புனித மரியாளுக்கு உரித்தானது. முடேயர் எனும் ஒருவகைக் கட்டடக்கலைக்கு இவ்வாலயம் பிரசித்திபெற்றது. 1986 ஆம் ஆண்டு இவ்வாலயம் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

டெருயெல் பெருங்கோவில்
Cathedral of Saint Mary of Teruel
Catedral de Santa María de Teruel
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்டெருயெல், ஆரகன், எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்40°20′38″N 1°06′26″W / 40.34389°N 1.10722°W / 40.34389; -1.10722
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1587

வரலாறு தொகு

இரண்டாம் அல்ஃபொன்சொ எனும் மன்னனால் இவ்வாலயத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின. 13 ஆம் நூற்றாண்டில் மொரிஸ்கோ கட்டடவடிவமைப்பாளரான யுசாஃப் என்பவர் இவ்வாலயத்தை மீளமைத்தார். இங்குள்ள முடேயர் மணிக்கோபுரம் 1257 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. 1538 ஆம் ஆண்டில் தேவாலயத்தின் நடுவில் ஒரு கூடம் ஒன்று (nave) கட்டப்பட்டது. 1587 ஆம் ஆண்டில் டெருயெல் திருச்சபை (Diocese of Teruel) எனும் பெயரில் ஒரு திருச்சபையும் ஆரம்பிக்கப்பட்டது.

கண்ணோட்டம் தொகு

இப்பெருங்கோயிலின் மணிக்கோபுரமானது எசுப்பானியாவில் பாதுகாக்கப்பட்டுவந்த மிகச்சிறந்த முடேயர் மணிக்கோபுரங்களில் ஒன்றாகும். இக்கோபுரம் சதுர வடிவார சமதரையயும் மூன்று அடுக்கு மாடிகளையும் கொண்டுள்ளது. இதன் உச்சியில் எண்கோண வடிவிலான ஒரு விளக்கு காணப்படுகின்றது.

படத்தொகுப்பு தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Teruel Cathedral
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெருயெல்_பெருங்கோவில்&oldid=3348526" இலிருந்து மீள்விக்கப்பட்டது