டெஸ்ஸி தாமஸ்

இந்திய விஞ்ஞானி

முனைவர் டெஸ்ஸி தாமஸ் (Tessy Thomas, பிறப்பு: 1963) அல்லது டெசி தாமசு ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் அக்னி-5 ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குனர். இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்டவர்.[1]

டெஸ்ஸி தாமஸ் [Missile Woman]
பிறப்பு1963
ஆலப்புழை, கேரளா
தேசியம்இந்தியர்
கல்விB.Tech.ஏவுகணைத் தொழில்நுட்பம், திருச்சூர் அரசுப் பொறியியல் கல்லூரி,

முதுகலைப்பட்டம் (M.Tech)

பாதுகாக்கப்பிற்கான மேம்பட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், பூனா.
பணிஅறிவியலாளர், இந்திய விண்வெளி ஆய்வு மையம்
செயற்பாட்டுக்
காலம்
1988 முதல் இதுவரை
பட்டம்அறிவியலாளர்
வாழ்க்கைத்
துணை
சரோஜ்குமார் படேல்
பிள்ளைகள்தேஜஸ்

இளமையும் கல்வியும் தொகு

டெசி கேரளாவின் ஆலப்புழையைச் சேர்ந்தவர்.[2] திருச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் புனேயில் உள்ள படைக்கலன் தொழில்நுட்பக் கழகத்தில் (தற்போது மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது) வழிப்படுத்திய ஏவுகணைக் கல்வியில் தொழில்நுட்ப முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]

பணிவாழ்வு தொகு

3000 கிமீ வீச்சுள்ள அக்னி-3 ஏவுகணைத் திட்டப்பணியில் டெசி இணை திட்டப்பணி இயக்குநராகப் பணியாற்றினார்.[1] தொடர்ந்து 2011இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அக்னி-4 ஏவுகணையின் திட்டப்பணியில் இயக்குநராகப் பணியாற்றினார்.[4] 5000 கிமீ வீச்சுள்ள அக்னி-5 திட்டப்பணிக்கு திட்ட இயக்குநராக 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஐதராபாத்தில் உள்ள மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகத்திலிருந்து செயலாற்றினார்.[5]. ஏப்ரல் 2012இல் இந்த ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.[6]

தனி வாழ்க்கை தொகு

கடற்படையில் ஓர் உயர் இயக்குநரான சரோஜ் பட்டேலை மணந்துள்ள இவருக்கு தேஜஸ் என்ற மகன் உள்ளார்.[3]

மேலும் பார்க்க தொகு

அக்னி ஏவுகணை

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Dr Tessy Thomas is first woman scientist to head missile project". Archived from the original on 2012-04-22. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
  2. "Profile of Dr.Tessy Thomas". Archived from the original on 2012-04-22. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
  3. 3.0 3.1 "Meet India's “Missile Woman”.". IWSA Newsletter 34 (3). September 2008. http://www.iwsa.net/BullJan09final.pdf. பார்த்த நாள்: 19 April 2012. 
  4. "'Agni Putri' Tessy Thomas breaks glass ceiling". Archived from the original on 2012-04-19. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
  5. Tessy Thomas is Agni V project head
  6. Agni-V successfully test-fired

வெளிl இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெஸ்ஸி_தாமஸ்&oldid=3672559" இலிருந்து மீள்விக்கப்பட்டது