டைம் 100 ஆண்டுதோறும் உலகில் மிகவும் தாக்கமேற்படுத்திய 100 நபர்களைப் பட்டியலிடும் இதழாகும். இதனை டைம் இதழ் தொகுத்து வழங்குகிறது. 1999ஆம் ஆண்டு முதல்முறையாக இப்பட்டியல் வெளியிடப்பட்டது.

டைம் 100 - 2008ஆம் ஆண்டு முகப்பு

வரலாறும் வடிவமும் தொகு

வாசிங்டன், டி. சி.யில் பெப்ரவரி 1, 1998ஆம் ஆண்டில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இதற்கான எண்ணக்கரு விளைந்தது. இந்தக் கருத்தரங்கில் சிபிஎஸ் செய்தித் தொகுப்பாளர் டான் ராதர், வரலாற்றாளர் டோரிசு கேர்ன்சு குட்வின், முன்னாள் நியூயார்க் ஆளுநர் மாரியோ குவோமோ, அப்போது அரசியல் கல்வி பேராசிரியராக இருந்த காண்டலீசா ரைஸ், புதுப் பழமைவாதம் வெளியீட்டாளர் இர்விங் கிரிஸ்டல் மற்றும் டைம் இதழின் மேலாண் இயக்குனர் வால்டர் ஐசாக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1999ஆம் ஆண்டு டைம் இதழ் இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குள்ள 100 நபர்கள் என்றுத் தலைப்பிட்டு இந்தப் பட்டியலை வெளியிட்டது. இதன் பரவலான வரவேற்பை அடுத்து 2004ஆம் ஆண்டு இதனை ஆண்டுதோறும் வெளியிடப்படும் பட்டியலாக மாற்றியது. இந்தப் பட்டியலில் இடம் பெறுவது ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது; இருப்பினும் டைம் இதழின் விளக்கத்தின்படி இதில் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ உலகை மாற்றியவர்கள் பட்டியலிடப்படுகிறார்கள். எனவே உலகில் மிகுந்த கொடுமை இழைத்தவர்களும் மிகுந்த தாக்கமேற்படுத்தியிருந்தால் பட்டியலிடப்படுகிறார்கள். ஐந்து வகைகளில் பட்டியலில் இடம் பெறுகின்றனர்: தலைவர்களும் புரட்சியாளர்களும், கட்டமைப்பாளர்களும் வணிகப் புலிகளும், கலைஞர்களும் மகிழ்வூட்டுபவர்களும், அறிவியலாளர்களும் சிந்தனையாளர்களும் மற்றும் சாதனையாளர்களும் பிம்பங்களும். ஒவ்வொரு வகைப்பாட்டினுள்ளும் 20 மிகவும் தாக்கமேற்படுத்திய நபர்கள் (சில நேரங்களில் இரட்டையாக அல்லது சிறு குழுக்களாக) தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு 100 நபர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைம்_100&oldid=3247122" இலிருந்து மீள்விக்கப்பட்டது