டை அமினோ அமிலம்

வேதியியலில்,டை அமினோ அமிலங்கள் டை அமினோ கார்பாக்சிலிக் அமிலம் என்றும் அழைக்கப்படும். ஒரு டை அமினோ அமிலம் குறைந்தபட்சம் ஒரு கார்பாக்சில் மற்றும் இரண்டு அமீன் வினைத் தொகுதியை கொண்ட ஒரு மூலக்கூறு ஆகும்.டை அமினோ அமிலங்கள் அமினோ அமிலங்களின் வர்க்கத்தைச் சேர்ந்தவை

உயிர்வேதியியல் செயல்பாடு தொகு

அஸ்பாரஜின், குளுட்டமைன் மற்றும் லைசின் ஆகியவை புரதச்சத்து உள்ள  டை அமினோ அமிலங்கள் ஆகும்.இவை புரோட்டீன்களின் பாகங்களாக உள்ளன. இந்த மூன்று டைமினோ அமிலங்கள் மரபணு மூலப்பொருளின் குறியீட்டுக்களால் குறியிடப்படுகின்றன, எனவே அவை நேர் அயனி அமினோ அமிலங்களாக உள்ளன.

ஆர்னித்தின் மற்றும் 2,6-டை அமினோ பீமெலிக் அமிலம் புரதச்சத்து அல்லாத டை அமினோ அமிலங்கள்.

உயிர் வேதியியலில், டைமினோ அமிலங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. டைமினோ அமிலங்கள் குறிப்பிட்ட பெப்டைட் நியூக்ளிக் அமிலங்களின் தொகுப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை பெப்டைட் நியூக்ளியிக் அமிலங்கள் இரட்டை டி.என்.ஏ- மற்றும் ஆர்.என்.ஏ-இழைகளுடன் இரட்டைக் கட்டமைப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவை, மேலும் ஒப்புமை டிஎன்ஏ என அழைக்கப்படுவது மட்டுமல்லாமல் அவை பூமியில் உள்ள முதல் மரபணுப் பொருட்களுக்கான வேட்பாளர்களாக கருதப்படுகின்றன. 2,3-டைமினோ புரப்பனாயிக்  அமிலம் போன்ற முப்பரிமாண வினையூக்கிகளில் அடங்கிய அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டன.. புரதச்சத்து[1]

மேற்கோள்கள் மற்றும் குறிப்புகள் தொகு

  1. Munoz Caro, GM; Meierhenrich, UJ; Schutte, WA; Barbier, B; Arcones Segovia, A; Rosenbauer, H; Thiemann, W; Brack, A et al. (2002). "Amino acids from ultraviolet irradiation of interstellar ice analogues". Nature 416 (6879): 403–406. doi:10.1038/416403a. பப்மெட்:11919624. Bibcode: 2002Natur.416..403M. 

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டை_அமினோ_அமிலம்&oldid=2748751" இலிருந்து மீள்விக்கப்பட்டது