தக்காசி இனூயி

தக்காசி இனூயி (乾 貴士 Inui Takashi?, பிறப்பு 2 சூன் 1988) சப்பானிய கால்பந்தாட்ட வீரர். இவர் எசுப்பானிய கழகமான ரியல் பெடிசிலும் சப்பான் தேசிய காற்பந்து அணியிலும் பக்கவாட்டு விளையாட்டாளராகவோ தாக்கும் நடுக்களத்தவராகவோ இருந்து வருகிறார்.

தக்காசி இனூயி

2018 உலகக்கோப்பையில் சப்பானுக்காக இனூயி ஆடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்தக்காசி இனூயி
பிறந்த நாள்2 சூன் 1988 (1988-06-02) (அகவை 35)
பிறந்த இடம்ஓமிகாச்சிமன், சிகா, சப்பான்
உயரம்1.69 மீ[1]
ஆடும் நிலை(கள்)பக்கவாட்டாளர் / தாக்கும் நடுக்களத்தார்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ரியல் பெடிசு
இளநிலை வாழ்வழி
1995–2004சாய்சன் கால்பந்து கழகம்
2004–2006யாசு உயர்நிலைப் பள்ளி
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2007–2009யோகாஹாமா மரினோசு7(0)
2008→ செரெசோ ஒசாக்கா (கடன்)20(6)
2009–2011செரெசோ ஒசாக்கா94(29)
2011–2012விஎஃப்எல் போகம்30(7)
2012–2015ஐந்த்ராக்ட் பிராங்பர்ட்டு75(7)
2015–2018எஸ்டி ஐபார்89(11)
2018–ரியல் பெடிசு0(0)
பன்னாட்டு வாழ்வழி
2006சப்பான் 21 கீழ்2(0)
2009–சப்பான்31(6)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 11:33, 3 சூலை 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 2 சூலை 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

கழக வாழ்வு தொகு

அனைத்து சப்பான் உயர்நிலைப்பள்ளி கால்பந்தாட்டப் போட்டியில், அவரது பள்ளி சிகா யாசு உயர்நிலைப்பள்ளி வெற்றி பெற்ற நிலையில், இனூயி தகுதிபெற்றவராக (Letterwinner) 2006இல் தேர்வானார்.[2]

2007இல் இனூயி யோகோஹாமா எப். மரினோசு கழகத்தில் இணைந்து ஜே லீக் டிவிசன் 1இல் விளையாடலானார். இருப்பினும் வழமையான அணிக்குத் தேர்வாகாமல் செரெசோ ஒசாக்கா அணிக்கு கடனாக அனுப்பப்பட்டார். இந்த பருவத்தின் இறுதியில் நிரந்தரமாக யோகோஹாமா அணியில் இடம் பிடித்தார்.[3]

சூலை 2011இல் ஐரோப்பாவில் விளையாடத் தொடங்கிய இனூயி செருமனியின் விஎஃப்எல் போகம் கழகத்தில் இணைந்தார்.[4]

 
2013இல் என்ட்ராகட் பிராங்க்பர்ட்டில் ஆடியபோது கையொப்பமிடல்

சூலை 2012இல் புன்டசுலீகா கழகமான என்ட்ராகட் பிராங்க்பர்ட்டில் மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "National Team Squad". jfa.or.jp. Japan Football Association. பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.
  2. (in Japanese)Yahoo!Japan(Sportsnavi). 9 January 2006 இம் மூலத்தில் இருந்து 14 January 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110114074805/http://sportsnavi.yahoo.co.jp/soccer/hs/84th/data/result06_index.html. பார்த்த நாள்: 26 July 2011. 
  3. (in Japanese)Supportista. 17 December 2008 இம் மூலத்தில் இருந்து 29 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120329114153/http://supportista.jp/news/2397. பார்த்த நாள்: 26 August 2011. 
  4. "Bochum holt einen Japaner" [Bochum sign a Japanese player] (in German). Deutsche Fussball Liga. 28 July 2011. Archived from the original on 31 August 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Inui signs for Frankfurt". Sky Sports. 9 July 2012. http://www1.skysports.com/football/news/11095/7884104/Inui-signs-for-Frankfurt. பார்த்த நாள்: 14 July 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்காசி_இனூயி&oldid=3587127" இலிருந்து மீள்விக்கப்பட்டது