தங்குதன்(V) புரோமைடு

வேதிச்சேர்மம்

தங்குதன்(V) புரோமைடு (Tungsten(V) bromide) என்பது WBr5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு புரோமைடு ஈந்தணைவிகளால் பாலமைக்கப்பட்ட ஈரெண்முக கட்டமைப்பை இச்சேர்மம் கொண்டுள்ளது[1].

தங்குதன்(V) புரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தங்குதன் பெண்டாபுரோமைடு
இனங்காட்டிகள்
13470-11-6 Y
InChI
  • InChI=1S/5BrH.W/h5*1H;/q;;;;;+5/p-5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139467
  • Br[W](Br)(Br)(Br)Br
பண்புகள்
WBr5
வாய்ப்பாட்டு எடை 583.36 கி/மோல்
தோற்றம் கரும்பழுப்பு நிறப் படிகங்கள்
நீருறிஞ்சும்
உருகுநிலை 286 °C (547 °F; 559 K)
கொதிநிலை 333 °C (631 °F; 606 K)
+250.0•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியல் இடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பும் கட்டமைப்பும் தொகு

தங்குதன் தூளுடன் புரோமினைச் சேர்த்து 650-1000 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் தங்குதன்(V) புரோமைடு உருவாகிறது. பெரும்பாலும் இவ்விளைபொருளுடன் தங்குதல் எக்சாபுளோரைடு கலந்து தூய்மையற்ற நிலையிலேயே காணப்படுகிறது [2].

தங்குதன்(V) புரோமைடு கட்டமைப்பில் ஈரெண்முகங்கள் விளிம்பில் பகிர்ந்து கொள்கின்ற அமைப்பைப் பெற்றுள்ளதாக எக்சு கதிர் விளிம்பு விளைவு பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன [1].

வினைகள் தொகு

ஒடுக்க வினை மூலம் பிற தங்குதன் சேர்மங்களைத் தயாரிக்க தங்குதன்(V) புரோமைடு ஒரு முன்னோடிச் சேர்மமாகத் திகழ்கிறது. உதாரணமாக, அலுமினியம் அல்லது தங்குதனுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக தங்குதன்(IV) புரோமைடைத் தயாரிக்கலாம் [2]. வேதி ஆவிக் கடத்தல் முறையில் WBr4 தூய்மையாக்கப்படுகிறது.

3 WBr5 + Al → 3 WBr4 + AlBr3

240 °செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாதல் செயல் முறையின் மூலமாக எஞ்சியுள்ள தங்குதன்(V) புரோமைடும் அலுமினியம் டிரைபுரோமைடும் நீக்கப்படுகின்றன.

தங்குதன் டெட்ராபுரோமைடை சூடுபடுத்தி தங்குதன்(II) புரோமைடு தயாரிக்கப்படுகிறது [2]. 450-500 °செல்சியசு வெப்பநிலையில் வாயுநிலையிலுள்ள தங்குதன்(V) புரோமைடு பசுமஞ்சள் நிறத்திலுள்ள தங்குதன்(II) புரோமைடை வீழ்படிவாக விட்டுவிட்டு வெளியேறுகிறது. இவ்வினையைப் போன்ற தயாரிப்பு முறையிலேயே தங்குதன்(II) குளோரைடும் தயாரிக்கப்படுகிறது.

குறைத்துப் பதிலிடும் வினைகள் தொகு

தங்குதன்(V) புரோமைடு சேர்மத்தை எளிதாக ஒடுக்க முடியும் என்பதால் மாற்று செயற்கை வழிமுறைப் பாதையில் தங்குதன்(IV) ஆலைடு கூட்டுப்பொருட்களை தயாரிக்க முடியும். உதாரணமாக, பிரிடினுடன் தங்குதன்(V) புரோமைடை வினை புரியச் செய்தால் WBr4(py)2 கிடைக்கிறது.[2]

2 WBr5 + 7 C5H5N → 2 WBr4(C5H5N)2 + bipyridine + C5H5NHBr

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Y.-Q. Zheng, K. Peters and H. G. von Schnering (1998) "Crystal structure of tungsten pentabromide, WBr5" Zeitschrift für Kristallographie - New Crystal Structures 213(3) 471
  2. 2.0 2.1 2.2 2.3 R.E. McCarley, T.M. Brown "The Preparation and Reactions of Some Tungsten (II) and Tungsten (IV) Halides" Inorg. Chem. 1964, volume 3, 1232-1236. எஆசு:10.1021/ic50019a007
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்(V)_புரோமைடு&oldid=2688106" இலிருந்து மீள்விக்கப்பட்டது