தசைகளின் குறைந்த அளவு சுருக்கம்

ஓய்வு நிலையில் இருக்கும் போது, சற்றே தூண்டுதல் பெற்று ஒரு குறிப்பிட்ட அளவு சுருங்கிய நிலையிலேயே தசைகள் காணப்படுகின்றன. இதற்குத் தசைகளின் குறைந்த அளவு சுருக்கம் (Musle tone) என்று பெயர். எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள தசைகளின் குறைந்த அளவு சுருக்கம், தண்டுவடத்திலிருந்து வரும் நரம்பு தூண்டல்களினால் நடைபெறுகிறது. இச்செயல், மூளையிலிருந்து வரும் தூண்டல்களினால் ஓரளவு நடைபெறுகிறது. தசை நார்களுக்குள்ளேயே தோன்றும் ஒரு தன்னிச்சையான செயலே, இந்தக் குறைந்த அளவு சுருக்கத்திற்குக் காரணமாகிறது.