தண்டுக்கீரை

தண்டுக்கீரை
உயிரியல் வகைப்பாடு
இனம்:
tricolor

தண்டுக்கீரை (Amaranthus tricolor) கீரைக்[1] குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். செழிப்பான பகுதிகளில் ஓர் ஆள் உயரம் வரை வளரக் கூடியது. தண்டுக்கீரை ஆறு மாதங்கள் வரை வளரக் கூடியது. ஆனால், 100 முதல் 120 நாட்களுக்குள் இந்தக் கீரையை அறுவடை செய்து சமைக்கும் போதுதான் தண்டுகள் நார் இல்லாமல் இளசாகவும், உண்ணுவதற்குச் சுவையாகவும் இருக்கும். முதிர்ந்த கீரையில் மிக அதிக அளவிலான எாிபொருள் கிடைக்கிறது. தண்டுக்கீரையைப் பருப்பு வகைகளோடு அவியல், மசியல், பொறியல் போன்ற பல விதங்களாக தயார் செய்தும் உண்ணலாம்.

சத்துக்கள் தொகு

தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருல்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தயமின், ரிபோஃப்ளேவின், நிகோடினிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், புரதம், தாது உப்புக்கள், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோாின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. English Names for Korean Native Plants (PDF). Pocheon: Korea National Arboretum. 2015. p. 349. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-89-97450-98-5. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2016 – via Korea Forest Service.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டுக்கீரை&oldid=3463204" இலிருந்து மீள்விக்கப்பட்டது