தண்டுபாள்யா (திரைப்படம்)

2012 கன்னட படம்

தண்டுபாள்யா (Dandupalya) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான இந்திய கன்னட குற்றவியல் திரைப்படமாகும். இதில் பூஜா காந்தி மற்றும் ரகு முகர்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த கதைக்களம், ‘தண்டுபாள்யா’ என்ற பெயர் கொண்ட கொள்ளைக் கும்பலின் கதையை அடிப்படையாகக் கொண்டது.[6] இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்க, ஆப்பிள் பிளாசம் கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் கிரீஷ் தயாரித்தார்.[7] இது ஒரு பெரிய வணிக வெற்றியடைந்தது. கன்னடத் திரைப்படத் துறையில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக ஆனது.[8] பல திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓடியது.

தண்டுபாள்யா
தண்டுபாள்யா சுவரிதழ்
இயக்கம்சீனிவாச ராஜு
தயாரிப்புபிரசாந்த் ஜி. ஆர்.
கிரிஷ் டி.
கதைசீனிவாச ராஜு
திரைக்கதைசீனிவாச ராஜு
இசைஅர்ஜுன் ஜெயண்ணா
நடிப்பு
ஒளிப்பதிவுவெங்கட் பிரசாத்
படத்தொகுப்புஎஸ். மனோகர்
கலையகம்ஆப்பிள் பிளாசம் கிரியேஷன்ஸ்
வெளியீடுசூன் 29, 2012 (2012-06-29)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
ஆக்கச்செலவு3 கோடி[1][2]
மொத்த வருவாய்மதிப்பீடு. 40 கோடி[3][4][5]

இப்படத்தின் தொடர்ச்சியாக தண்டுபாள்யா 2 படம் குறித்த அறிவிப்பானது 2014 சூலையில் அறிவிக்கப்பட்டு, 2016 மார்ச் 24 அன்று தயாரிப்புப் பணிகள் தொடங்கின. இந்த இரண்டாம் பாகத்தை சிறீனிவாஸ் ராஜு இயக்கினார். இது 2017 சூலை 14, அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடம் பெற்ற நேர்மறை விமர்சனங்களுக்காக. மீண்டும் இந்தப் படத்தில் பூஜா காந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அர்ஜுன் ஜன்யா இசையமைத்திருந்தார், ஒளிப்பதிவை வெங்கட் பிரசாத் மேற்கொண்டார்.[9][10]

தண்டுபாள்யா 3 படமும் அதனுடன் சேர்த்து ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இவை கிட்டத்தட்ட அதே நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்டது. பகுதி 2 பகுதி 3 ஆகியவை ஒரு மாத இடைவெளியில் வெளியிட திட்டமிடமிடப்பட்டது.[11][12][13]

கதைச்சுருக்கம் தொகு

பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடிக்கும் கொள்ளைக் கும்பலின் தலைவி இலட்சுமி (பூஜா காந்தி ) என்ற பெண்ணை சுற்றி கதை நடக்கிறது. தனியாக இருக்கும் பெண்கள் உள்ள வீட்டுக்கு இலட்சுமி தண்ணீர் கேட்டு செல்லுவாள். அவள் உள்ளே செல்லும்போது, கிருஷ்ணா ( மகரந்த் தேஷ்பாண்டே ) மற்றும் ஹனுமா ( ரவி காலே ), திம்மா (ஜெய்தேவ்), முனியா (கரிசுப்பு) போன்ற பிறர் தலைமையிலான முழு கும்பலும் வீட்டிற்குள் நுழைந்து பெண்களைக் கொல்வர்.

குருதி வெளியேறும் போது தொண்டையில் இருந்து வெளிவரும் சத்தத்தை விரும்பி கிருஷ்ணா தொண்டையை அறுப்பதில் சிலிர்ப்பு அடைகிறான். பின்னர் அவர்கள் வீட்டை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்செல்கின்றனர். அவர்கள் அனைவரும் மோசமான உடையணிந்து, முரட்டுத்தனம் மிக்கவர்களாக இருபர். காவல் ஆய்வாளர் சலபதி ( பு. ரவிசங்கர் ) அவர்களை கைது செய்யும் சவாலை ஏற்றுக்கொள்கிறார். திம்மா திருடப்பட்ட கோவில் நகைகளை எடுத்துச் செல்கிறான். அவன் நகைக்கடைக்காரரால் நிராகரிக்கப்படுகிறான். அதே நேரத்தில் காவல் ஆய்வாளர் சலபதியிடம் சிக்கிக்கொள்கிறான். இதன்பிறகு அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

நடிப்பு தொகு

  • லட்சுமியாக பூஜா காந்தி
  • அரியாக ரகு முகர்ஜி
  • ரகுவின் மனைவி சுசீலாவாக பிரியங்கா கோத்தாரி
  • காவல் ஆய்வாளர் சலபதியாக பு. ரவிசங்கர்
  • கிருஷ்ணாவாக மகரந்த் தேஷ்பாண்டே
  • சந்தராக ரவி காலே
  • கோடி திம்மாவாக ஜெயதேவ் மோகன்
  • கரிசுப்பு சிக் முனியாக
  • முனிகிருஷ்ணாவாக முனிராஜு
  • கொள்ளைக் கும்பல் உறுப்பினராக யதிராஜ்
  • கும்பல் உறுப்பினராக டேனி குட்டப்பா
  • கும்பல் உறுப்பினராக பெட்ரோல் பிரசன்னா
  • ஆய்வாளர் சலபதி மனைவியாக சுதாராணி
  • ரகுவின் சகோதரி பாவ்யாவாக பவ்யா
  • வழக்கறிஞர் பட்டாக தொட்டண்ணா
  • சுசீலாவின் தந்தையாக ரமேஷ் பட்
  • சுசீலாவின் தாயாக சித்ரா ஷெனாய்
  • வழக்கறிஞராக சீனிவாச மூர்த்தி
  • காவல் ஆய்வாளர் பிரதாபாக ஹரிஷ் ராய்
  • பிரதிக்
  • முனியா மேஸ்திரியாக புல்லட் பிரகாஷ்
  • பிரதீப் கடாதர்
  • நீதிபதியாக எடக்கல்லு குடா சந்திரசேகர்
  • சங்கேத் காசி

தயாரிப்பு தொகு

இந்தப் படத்தில் கொள்ளைக் கும்பல் தலைவி இலட்சுமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பூஜா காந்தி அணுகப்பட்டார். கன்னடத் திரையுலகில் எதிர்மறையான பேச்சுக்கு ஆளாக நேரிடும் என்பதால், தயக்கத்துடன் அவர் அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.[14][15][16]

சர்ச்சை தொகு

இந்த திரைப்படத்தை சமூக குழுவான பகுஜன் சமாஜ் ஹோரதா சமிதியால் விமர்சிக்கப்பட்டது. படத்தின் உள்ளடக்கம் புண்படுத்துவதாக கூறியது. குறிப்பாக படத்தில் பெண்கள் சித்தரிக்கப்பட வித்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த படத்தில் நடிகை பூஜா காந்தி அரை நிர்வாணமாக தோன்றுகிறார் என்று தெரியவந்தபோது மேலும் சர்ச்சை ஏற்பட்டது.[6][17]

திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, அம்பேத்கர் கிரந்தி சேனா ஆதரவாளர்கள் பெங்களூருவில் "சமூக விரோத செயல்களைப் புகழ்வதற்கு" எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.[18]

பூஜா காந்தி சர்ச்சைக்குரிய காட்சிப் பற்றி குறிப்பிடும்போது, நிர்வாணம் என்பது தலை முதல் கால் வரை துணியால் மூடப்படததே. ஆனால் அந்த காட்சியில், நான் புடவை அணிந்திருக்கிறேன், என் முதுகு தவிர, என் உடலை மறைத்தே இருந்தேன் ". என்று குறிப்பிட்டார்.[19]

வெளியீடு தொகு

இப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு "ஏ" சான்றிதழ் வழங்கியது. இது 2012 சூன் 29 அன்று தண்டுபாள்யா கர்நாடகம் முழுவதும் வெளியிடப்பட்டது.[20] இருப்பினும், தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகள் ஒரு ஆண்டு கழித்து, 2013 சனவரி 25 மற்றும் 2014 மே 24 அன்று வெளியிடப்பட்டன.[21][22][23]

லட்சுமியாக நடித்ததற்காக காந்தி பல விருதுகளைப் பெற்றார்.[24][25]

வரவேற்பு தொகு

 Professional ratings
Review scores
Source Rating
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா      
பெங்களூர் மிரர்      
ஒன் இந்தியா      
டெக்கன் ஹெரால்டு      
Chitraloka      
இந்தியன் எக்சுபிரசு      
தி டெக்கன் குரோனிக்கள்      
விஜய கர்நாடகா      
இண்டர்நேசனல் பிசுனசு டைம்சு      
தி இந்து      

படத்தில் கொடூர கொள்ளைக் கும்பலின் வன்முறைச் சம்பவங்கள் உண்மைக்கு நெருக்கமாகவும், பார்வையாளர்களை பதபதைக்க வைப்பதாக இருந்ததாக விமர்சகர்கள் கூறினர்.

வணிக வெற்றி தொகு

இப்படம், இதன் அனைத்து மொழிமாற்றப் பதிப்புகளையும் சேர்த்து 40 கோடி வசூலித்தது [3] ஆனால் இதன் தயாரிப்பு செலவு 3 கோடி ஆகும்.[5] இப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்து ஓடியது.[26]

ஆந்திர பிரதேசம் தொகு

இந்தப் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தண்டுபாளையம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதற்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.[27] தெலுங்கு பதிப்பானது 110 பிரதிகள் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மற்றும் ஆந்திர / தெலுங்கானாவில் உள்ள "குண்டூர்" மற்றும் "ஓங்கோல்" நகரங்களில் 100 நாட்கள் கடந்து ஓடியது.[28][29][30][31][32]

தமிழ்நாடு தொகு

இப்படத்தை தமிழில் கரிமேடு என்ற பெயரில் ராம நாராயணனின் சிறீ தேனாண்டாள் பிலிம்ஸ் மொழிமாற்றம் செய்து 2013 மே 24 அன்று வெளியிட்டது. படம் வெளியானதும் விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது. திரைப்படம் 2021 செப்டம்பர் 3 அன்று மீண்டும் வெளியிடப்பட்டது.[33][34][35]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

மொத்தம்

விருதுகள் தொகு

விழா வகை பரிந்துரை முடிவு
2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகை பூஜா காந்தி வெற்றி[36][37]
துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகர் ரகு முகர்ஜி பரிந்துரை
எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகர் மகரந்த் தேஷ்பாண்டே பரிந்துரை
சுவர்ணா திரைப்பட விருதுகள் சிறந்த நடிகை பூஜா காந்தி வெற்றி[38]
பெங்களூர் டைம்ஸ் திரைப்பட விருதுகள் எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகர் மகரந்த் தேஷ்பாண்டே பரிந்துரை[39]
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் சிறந்த நடிகை பூஜா காந்தி பரிந்துரை[40]

மேற்கோள்கள் தொகு

 

  1. "Sandalwood: Hits and misses of 2012". newindianexpress.com.
  2. "No Sequel for Kannada film 'Dandupalya'". news18.
  3. 3.0 3.1 "'DANDUPALYAM-2' SET FOR JULY 14 RELEASE". indiaglitz. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Dandy" defined multiple times with different content
  4. "Dandupalya collected ₹25 crore in Karnataka and along with its Telugu dubbed version collected ₹10 crore". www.sify.com இம் மூலத்தில் இருந்து 2016-01-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160112121914/http://www.sify.com/movies/2-news-telugu-qbmaO6cjafahh.html. 
  5. 5.0 5.1 "Dandupalya said to have made ₹25 crore in Karnataka". m.timesofindia.com.
  6. 6.0 6.1 Pooja Gandhi's Dandupalya facing hurdles for release பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம்.
  7. Dandupalya Torture Sequnce Was Required – Pooja. chitraloka.com (31 December 2011)
  8. Dandupalyam releases in AP today – The Times of India.
  9. "Going Back to Crime". newindianexpress.com. 19 March 2016.
  10. "Dandupalya 2 Movie Review". timesofindia.
  11. "Dandupalya 3 Shot simultaneously with Part 2". newindianexpress.
  12. "After going topless in Dandupalya, Pooja Gandhi to shock fans with a lip-lock in its sequel". ibtimes.
  13. "Dandupalya sequel to be more provocative". newindianexpress.
  14. "ಪೂಜಾ ಗಾಂಧಿ ಅಮೋಘ ಅಭಿನಯದ 'ದಂಡ'ಪಾಳ್ಯ". kannada.filmibeat.com.
  15. "critically-acclaimed Kannada film Dandupalya is now dubbed as Karimedu in Tamil". m.timesofindia.com.
  16. "Pooja Gandhi still committed to 'Hoovi'". www.newindianexpress.com.
  17. "Mungaaru Male girl Pooja Gandhi seems to have taken a bold step to stay in the race". filmibeat.
  18. "Protest held against Dandupalya". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120704045809/http://www.thehindu.com/news/states/karnataka/article3588127.ece. 
  19. "I wasn't nude for the film: Pooja Gandhi". m.timesofindia.com.
  20. "Dandupalya 2 caught in an endless wait". newindianexpress.
  21. "Dandupalyam releases in AP today". timesofindia.
  22. "Kannada film dub titled as 'Karimedu' in Tamil". filmipop.
  23. "KARIMEDU". desimartini.[தொடர்பிழந்த இணைப்பு]
  24. "Dandupalya is Karimedu in Tamil". timesofindia.
  25. "Pooja Gandhi To Be A Part Of Dandupalya 2". m.desimartini.com.
  26. . 
  27. "దండుపాళ్యం – రియాలిటీకి చాలా దగ్గరగా". 123telugu.com.
  28. Kannada 'Danduplaya' to be remade in Hindi – News18.
  29. Dandupalyam 100 Days Function. ragalahari.com
  30. Dandupalyam-completes-100-days-in-two-theatres Movie Photo Galleries, Cinema News, Video songsa and Movies.
  31. "Dandupalya dubbed version a hit" இம் மூலத்தில் இருந்து 2013-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029184234/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-31/news-interviews/36658052_1_dandupalyam-kannada-film-industry-notorious-dandupalya-gang. 
  32. Dandupalyam.
  33. "'Karimedu' – spine chilling, realistic (Tamil Movie Review)". business-standard.
  34. "Pooja Gandhi's Dandupalya is now Karimedu in Tamil". kollytalk.com. 9 May 2013. Archived from the original on 17 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  35. "'Karimedu' – spine chilling, realistic (Tamil Movie Review)". sify. Archived from the original on 2017-07-30.
  36. Kamath, Sudhish (15 செப்டம்பர் 2013) Stars in Sharjah. The Hindu. Retrieved on 2017-01-14.
  37. "Dhanush, Shruti Haasan win top laurels at SIIMA awards". sify. Archived from the original on 2017-07-30.
  38. https://www.zee5.com/zee5news/8-outstanding-films-to-celebrate-sandalwood-actress-pooja-gandhis-36th-birthday/
  39. "Bangalore Times Film Awards 2012 nominations: Best Actor in a Negative Role". timesofindia.
  40. "Pooja Gandhi – Awards". Internet Movie Database.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டுபாள்யா_(திரைப்படம்)&oldid=3930630" இலிருந்து மீள்விக்கப்பட்டது