தன்மய் மிஸ்ரா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

தன்மய் மிஸ்ரா (Tanmay Mishra, ஒடியா: ତନ୍ମୟ ମିଶ୍ର, பிறப்பு: டிசம்பர் 22, 1986) கென்னியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இந்தியா, மும்பையில் பிறந்த இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை கென்ய அணிக்காக 2006 ஆம் ஆண்டில் சிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடினார். 2007 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவில் பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொண்டதால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர் கென்யாவுக்காக எப்போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை.[1] 2010 அக்டோபரில் மீண்டும் கென்ய அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.[2]

தன்மய் மிஸ்ரா
Tanmay Mishra
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தன்மய் மிஸ்ரா
பிறப்பு22 திசம்பர் 1986 (1986-12-22) (அகவை 37)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-வேகம்
பங்குதுடுப்பாட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்25 பெப்ரவரி 2006 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப2 சூலை 2013 எ. இசுக்கொட்லாந்து
இ20ப அறிமுகம்1 செப்டம்பர் 2007 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப5 சூலை 2013 எ. இசுக்கொட்லாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012டெக்கான் சார்ஜர்ஸ்
2014பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 42 15 17 56
ஓட்டங்கள் 1,128 227 920 1,509
மட்டையாட்ட சராசரி 34.18 15.13 31.72 33.53
100கள்/50கள் 0/8 0/0 1/7 0/11
அதியுயர் ஓட்டம் 72 38 108 72
வீசிய பந்துகள் 9 30 102 9
வீழ்த்தல்கள் 1 3 1 1
பந்துவீச்சு சராசரி 12.00 11.00 66.00 12.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/6 3/25 1/53 1/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 3/– 21/– 17/–
மூலம்: ESPNcricinfo, சூலை 1 2015

மிஸ்ரா 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இந்தியக் குடியுரிமை உள்ளவராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2014 இல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடினார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்மய்_மிஸ்ரா&oldid=3850585" இலிருந்து மீள்விக்கப்பட்டது