தன்ராச்சு மகால்

மும்பையிலுள்ள கட்டடம்

தன்ராச்சு மகால் (Dhanraj Mahal) இந்தியாவின் மும்பையில் உள்ள தன்ராச்சுகிர் குடும்பத்தின் வசிப்பிடமாகும். இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆராவில் நடித்துள்ள நடிகை சுபைதா பேகம் தன்ராச்சுகிர் இங்கு வசித்தார். 1920 ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவிய பிரான்சு நாட்டுக் கட்டிடக் கலை வடிவமான தெக்கோ எனப்படும் எழில்படுக் கலை பாணியில் இம்மகால் கட்டப்பட்டுள்ளது. மும்பையில் 1930 ஆம் ஆண்டுக்கும் 1950 ஆம் ஆண்டுக்கும் இடையில் நகரத்தின் தெற்குப் பகுதியில் இத்தகைய கட்டிடங்கள் பெருகின. ஐதராபாத்து மன்னர் தன்ராச்சுகிரின் முன்னாள் அரண்மனையாகவும், ஒரு காலத்தில் மும்பையின் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த கட்டிடமாகவும் இது இருந்தது.[1][2]

தன்ராச்சு மகால்
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஎழில்படுக் கலை
இடம்மும்பை
தன்ராச்சு மகால் நுழை வாயில்

மேற்கோள்கள் தொகு

  1. Dore, Bhavya (22 June 2017). "The battle to save Mumbai's art deco buildings". Bbc.com. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.
  2. "Dhanraj Mahal Mumbai Historic Heritage". Gounesco.com. 16 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்ராச்சு_மகால்&oldid=3781767" இலிருந்து மீள்விக்கப்பட்டது