தமிழ்நாட்டில் தேர்தல்கள்

(தமிழகத் தேர்தல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாட்டில் சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுக்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

நேரடித் தேர்தல் தொகு

தமிழ் நாடு மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய தமிழ் நாடு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.

மறைமுகத் தேர்தல் தொகு

இது தவிர மறைமுகத் தேர்தலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் குடியரசுத தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. உள்ளாட்சியிலும் மறைமுகத் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையரால் நடத்தப் பெறுகின்றன.


தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையால் நடத்தப்படும் தேர்தல்கள் தொகு

நேரடித் தேர்தல்கள்[1]
எண் தேர்தல்கள் தொகுதிகள்
1 சட்டப் பேரவை 234
2 மக்களவை 39
மறைமுகத் தேர்தல்கள்[1]
எண் தேர்தல்கள் தொகுதிகள்/இருக்கை
1 மாநிலங்களவை 18
2 குடியரசுத் தலைவர் 1
3 குடியரசுத் துணைத் தலைவர் 1

மாநிலத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் நடத்தப் பெறும் தேர்தல்கள் தொகு

உள்ளாட்சி நேரடித் தேர்தல்கள்[2]
எண் அலுவலகம் இருக்கைகள் / அலுவலகம்
1 மாநகராட்சி மேயர் 6 (தற்பொழுது 10)
2 மாநகராட்சி உறுப்பினர்கள்
(கவுன்சிலர்-நகாரட்சி உறுப்பினர்)
474
3 நகராட்சித் தலைவர்கள் 102
4 நகராட்சி உறுப்பினர்கள் 3,392
5 மூன்றாம் படி நகராட்சித் தலைவர்கள் 50
6 மூன்றாம் படி நகராட்சி உறுப்பினர்கள் 969
7 மாவட்ட ஊராட்சி வட்ட (வார்டு) உறுப்பினர்கள் 656
8 ஊராட்சி ஒன்றிய வட்ட உறுப்பினர்கள் 6,570
9 பேரூராட்சித் தலைவர்கள் 561
10 பேரூராட்சி வட்ட உறுப்பினர்கள் 6,825
11 கிராம ஊரட்சித் தலைவர்கள் (பிரசிடன்ட்) 12,618
12 கிராம ஊராட்சி வட்ட உறுப்பினர்கள் 97,458


உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்கள்[2]
எண் அலுவலகம்
1 நகராட்சி அமைப்புகள்
2 மாநகர மேயர் மற்றும் துணை மேயர்
3 நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
4 மூன்றாம் படி நகரமன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
5 பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
6 சட்டப்படித் தேவைப்படக்கூடிய நிரந்தர உறுப்பினர்க்ள

மக்களவைத் தேர்தல்கள் தொகு

மக்களவைத் தேர்தல்களின் வரலாறு தொகு

கட்சிகளுக்கான வண்ண விசை
மக்களவைத் தேர்தல்கள்
பேரவை
(தேர்தல்)
மொத்த தொகுதிகள் முதலாவது இரண்டாவது மூன்றாவது
அரசியல் கட்சி தொகுதிகள் வாக்கு சதவீதம் அரசியல் கட்சி தொகுதிகள் வாக்கு சதவீதம் அரசியல் கட்சி தொகுதிகள் வாக்கு சதவீதம்
1வது
(1951)
75 இந்திய தேசிய காங்கிரஸ் 35 36.39% சுயேச்சை 15 23.15% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 8.95%
2வது
(1957)
41 இந்திய தேசிய காங்கிரஸ் 31 46.52% சுயேச்சை 8 39.77% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 10.06%
3வது
(1962)
41 இந்திய தேசிய காங்கிரஸ் 31 45.26% திராவிட முன்னேற்றக் கழகம் 7 18.64% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 10.24%
4வது
(1967)
39 திராவிட முன்னேற்றக் கழகம் 25 35.78% சுதந்திர கட்சி 6 9.16% இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 4 6.85%
5வது
(1971)
39 திராவிட முன்னேற்றக் கழகம் 23 35.25% இந்திய தேசிய காங்கிரஸ் 9 12.51% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 5.43%
6வது
(1977)
39 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 17 30.04% இந்திய தேசிய காங்கிரஸ் 14 22.27% இந்திய தேசிய காங்கிரஸ் (அமைப்பு) 3 17.67%
7வது
(1980)
39 இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) 20 31.62% திராவிட முன்னேற்றக் கழகம் 16 23.01% அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2 25.38%
8வது
(1984)
39 இந்திய தேசிய காங்கிரஸ் 25 40.51% அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 12 18.36% திராவிட முன்னேற்றக் கழகம் 2 25.90%
9வது
(1989)
39 இந்திய தேசிய காங்கிரஸ் 27 39.86% அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 11 17.12% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 2.04%
10வது
(1991)
39 இந்திய தேசிய காங்கிரஸ் 28 42.57% அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 11 18.10% காலியிடம்
11வது
(1996)
39 தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 20 27.00% திராவிட முன்னேற்றக் கழகம் 17 25.63% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 2.33%
12வது
(1998)
39 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 18 25.89% திராவிட முன்னேற்றக் கழகம் 5 20.08% பாட்டாளி மக்கள் கட்சி 4 6.05%
13வது
(1999)
39 திராவிட முன்னேற்றக் கழகம் 12 23.13% அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 10 25.68% பாட்டாளி மக்கள் கட்சி 5 8.21%
14வது
(2004)
39 திராவிட முன்னேற்றக் கழகம் 16 24.60% இந்திய தேசிய காங்கிரஸ் 10 14.40% பாட்டாளி மக்கள் கட்சி 5 6.71%
15வது
(2009)
39 திராவிட முன்னேற்றக் கழகம் 18 25.09% அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 9 22.88% இந்திய தேசிய காங்கிரஸ் 8 15.03%
16வது
(2014)
39 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 44.92% பாரதிய ஜனதா கட்சி 1 5.56% பாட்டாளி மக்கள் கட்சி 1 4.49%
17வது
(2019)
39 திராவிட முன்னேற்றக் கழகம் 24 33.52% இந்திய தேசிய காங்கிரஸ் 8 12.62% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 2.40%
18வது
(2024)
39

சட்டமன்றத் தேர்தல்கள் தொகு

சட்டமன்றத் தேர்தல்களின் வரலாறு தொகு

கட்சிகளுக்கான வண்ண விசை
சட்டமன்றத் தேர்தல்கள்
பேரவை
(தேர்தல்)
மொத்த தொகுதிகள் முதலாவது இரண்டாவது மூன்றாவது
அரசியல் கட்சி தொகுதிகள் வாக்கு சதவீதம் அரசியல் கட்சி தொகுதிகள் வாக்கு சதவீதம் அரசியல் கட்சி தொகுதிகள் வாக்கு சதவீதம்
1வது
(1952)
375 இந்திய தேசிய காங்கிரஸ் 152 34.88% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 62 13.18% சுயேச்சை 62 23.75%
2வது
(1957)
205 இந்திய தேசிய காங்கிரஸ் 151 45.34% சுயேச்சை 48 44.62% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 7.40%
3வது
(1962)
206 இந்திய தேசிய காங்கிரஸ் 139 46.14% திராவிட முன்னேற்றக் கழகம் 50 27.10% சுதந்திர கட்சி 6 7.82%
4வது
(1967)
234 திராவிட முன்னேற்றக் கழகம் 137 40.69% இந்திய தேசிய காங்கிரஸ் 51 41.10% சுதந்திர கட்சி 20 5.30%
5வது
(1971)
234 திராவிட முன்னேற்றக் கழகம் 184 48.58% இந்திய தேசிய காங்கிரஸ் (அமைப்பு) 15 34.99% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 2.32%
6வது
(1977)
234 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 130 30.36% திராவிட முன்னேற்றக் கழகம் 48 24.89% இந்திய தேசிய காங்கிரஸ் 27 17.50%
7வது
(1980)
234 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 129 38.75% திராவிட முன்னேற்றக் கழகம் 37 22.10% இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) 31 20.92%
8வது
(1984)
234 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 132 37.03% இந்திய தேசிய காங்கிரஸ் 61 16.28% திராவிட முன்னேற்றக் கழகம் 24 29.34%
9வது
(1989)
234 திராவிட முன்னேற்றக் கழகம் 150 33.18% அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 29 21.77% இந்திய தேசிய காங்கிரஸ் 26 19.83%
10வது
(1991)
234 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 164 44.39% இந்திய தேசிய காங்கிரஸ் 60 15.19% திராவிட முன்னேற்றக் கழகம் 2 22.46%
11வது
(1996)
234 திராவிட முன்னேற்றக் கழகம் 173 42.07% தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 39 9.30% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 2.12%
12வது
(2001)
234 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 132 31.44% திராவிட முன்னேற்றக் கழகம் 31 30.92% தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 23 6.73%
13வது
(2006)
234 திராவிட முன்னேற்றக் கழகம் 96 26.46% அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 61 32.64% இந்திய தேசிய காங்கிரஸ் 34 8.38%
14வது
(2011)
234 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 150 38.40% தேசிய முற்போக்கு திராவிட கழகம் 29 7.88% திராவிட முன்னேற்றக் கழகம் 23 22.39%
15வது
(2016)
234 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 136 41.06% திராவிட முன்னேற்றக் கழகம் 89 31.86% இந்திய தேசிய காங்கிரஸ் 8 6.42%
16வது
(2021)
234 திராவிட முன்னேற்றக் கழகம் 133 37.70% அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 66 33.29% இந்திய தேசிய காங்கிரஸ் 18 4.27%

இடைத்தேர்தல்கள் தொகு

மாநிலங்களவை, மக்களவை, அல்லது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர், பதவிக்காலம் முடிவதற்குள் அலுவலகம் காலியாக இருந்தால், காலியான பதவியை நிரப்ப பொருத்தமான மாற்றீட்டைக் கண்டறிய இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இது பெரும்பாலும் இடைத்தேர்தல் என்று குறிப்பிடப்படுகிறது.

இடைத்தேர்தலுக்கான பொதுவான காரணங்கள்:

  • பதவியில் இருந்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரின் ராஜினாமா.
  • பதவியில் இருந்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரின் மரணம்.

ஆனால், பதவியில் இருப்பவர் பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்ற காரணத்தால் (குற்றத் தண்டனை, பின்னர் கண்டறியப்பட்ட தேர்தல் முறைகேடுகள் காரணமாக அலுவலகத்தில் குறைந்தபட்ச வருகை அளவை பராமரிக்கத் தவறியதால் அல்லது ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால், மற்ற காரணங்கள் ஏற்படுகின்றன. ஒன்றை காலி செய்யவும்).

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு