தமிழகம் பற்றிய தொலெமியின் குறிப்புகள்

தமிழகம் பற்றிய தொலெமியின் குறிப்புகள் என்னும் இக்கட்டுரை கிரேக்க புவியியலாளர் தொலெமி (கி.பி 90 - 168) குறித்த தமிழக பகுதிகளை விளக்குகிறது. தொலெமியின் குறிப்புகளை வி. கனகசபை என்பவர் The Tamils 1800 Years Ago என்னும் ஆங்கில நூலில் விரிவாக கொடுத்திருப்பார். மேலும் இதில் தொலெமி குறித்து வைத்த தமிழகத்தின் ஊர்கள் எங்கு இருக்கலாம் என்ற அனுமானங்களையும் முடிவுகளையும் தந்திருப்பார். இதில் முக்கிய தலைநகரங்கள் மற்றும் துறைமுகங்கள் பற்றிய கனகசபையின் கூற்றை மற்ற ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் சிறிய நகரங்கள், துணை நகரங்கள், துணைத் துறைமுகங்கள் போன்றவற்றை வி. கனகசபை கணித்ததில் இருந்து சில ஆராய்ச்சியாளர்கள் மாறு படுவதுமுண்டு. அவற்றையும் இக்கட்டுரை விளக்குகிறது.

இடங்களின் பட்டியல் தொகு

மேற்குக்கரை துறைமுகங்கள் தொகு

தமிழகத்தின் மேற்குக்கரை சார்ந்த துறைமுகங்கள், ஆறுகள் மற்றும் நகரங்கள்

தொலெமி குறித்தவை வி. கனகசபை குறித்தவை மற்ற அறிஞர்கள் குறித்தவை
துண்டிஸ் நகரம் தொண்டி எடுத்துக்காட்டு
பிரமகரா பிரம்மக்குளம் எடுத்துக்காட்டு
கலைக்கரியாசு சாலக்கூரி எடுத்துக்காட்டு
பாலூரா பாளையூர் எடுத்துக்காட்டு
முசிறிசு வாணிகக்கள துறைமுகம் முசிறித் துறைமுகம் எடுத்துக்காட்டு
சுயுடோசுடமாசு ஆற்றுமுகம் பெரியாற்றுக் கழிமுகம் எடுத்துக்காட்டு
பொடொபெரூரா உதியம்பேரூர் எடுத்துக்காட்டு
செம்னே செம்பை எடுத்துக்காட்டு
கொரியூரா கொத்தோரா எடுத்துக்காட்டு
பக்கரை வைக்கரை எடுத்துக்காட்டு
பரிசு ஆற்றுமுகம் பாலிக் கழிமுகம் எடுத்துக்காட்டு

பரிசு ஆற்றுக்கும் சுயுடோசுடமாசு ஆற்றுக்கும் இடையிலுள்ள நகரங்கள் தொகு

தொலெமி குறித்தவை வி. கனகசபை குறித்தவை மற்ற அறிஞர்கள் குறித்தவை
பசகெ - எடுத்துக்காட்டு
மசுத்தனூர் - எடுத்துக்காட்டு
கூரெல்லூர் - எடுத்துக்காட்டு
கோமேதகம் நிறைந்த புன்னாடா பூஞ்சற்று எடுத்துக்காட்டு
ஆலோ அலுவாய் எடுத்துக்காட்டு
கேரொபொத்ராசின் தலைநகரான கரூரா சேரர் தலைநகரான கரூர் எடுத்துக்காட்டு
ஆரெம்பூர் பிடெரிசு பிதாரா எடுத்துக்காட்டு
பந்திபோலிசு - எடுத்துக்காட்டு
அடரிமா கொரியூர் அதரி மலை எடுத்துக்காட்டு
அயாய் மொருண்டா எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு
கொட்டனாரா குட்டநாடு எடுத்துக்காட்டு

ஆய் நாட்டுத் துறைமுகங்கள் தொகு

அடுத்து அவர் குறிப்பது அயாய் நாடு சார்ந்த துறைமுகங்கள், ஆறுகள் மற்றும் நகரங்கள் ஆகும். இந்த அயாய் நாட்டை ஆய் குடியினரே ஆண்டு வந்தனர். அதன் பட்டியல்,

தொலெமி குறித்தவை வி. கனகசபை குறித்தவை மற்ற அறிஞர்கள் குறித்தவை
மெல்குண்டா நிற்குன்றம் எடுத்துக்காட்டு
எலங்கோன் வாணிகக்களம் விளவங்கோடு எடுத்துக்காட்டு
தலைநகர் கொட்டியாரா கோட்டாறு எடுத்துக்காட்டு
பம்மலா பொன்னணை எடுத்துக்காட்டு
மொமாரியா முனை கன்னியாகுமரி எடுத்துக்காட்டு


மேலும் பார்க்க தொகு

மூலம் தொகு

  • V. Kanakasabhai Pillai (1979). The Tamils Eighteen Hundred Years Ago. Asian Educational Services, noolaham.org (in web). pp. (10 - 30). {{cite book}}: External link in |title= (help)
  • கா. அப்பாத்துரை (1962). ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம். Colombo Apothecaries' Co., Ltd, noolaham.org (in web). pp. (20 - 58). {{cite book}}: External link in |title= (help)

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு