தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் படுகொலை, 2006

தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் படுகொலை (murder of TRO workers) என்பது 2006 ஆம் ஆண்டில் ஏழு தமிழர் புனர்வாழ்வுக் கழகப் (தபுக) பணியாளர்கள் கடத்தப்பட்ட நிகழ்வையும், பின்னர் அவர்கள் இறந்து விட்டதாக ஊகிக்கப்பட்ட நிகழ்வையும் குறிக்கும்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் படுகொலை
இடம்வெலிக்கந்தை, இலங்கை
நாள்2006 (+6 கி.இ.நே)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழ்ப் பொதுமக்கள்
தாக்குதல்
வகை
தெரியவில்லை
ஆயுதம்தெரியவில்லை
இறப்பு(கள்)7
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
துணை இராணுவக் குழு

கடத்தல் தொகு

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் 2006 சனவரி 29, 30 ஆம் நாட்களில் மட்டக்களப்பில் இருந்து புனர்வாழ்வுக் கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்திருந்த கிளிநொச்சிக்கு பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தனர். இவர்கள் மட்டக்களப்பு – பொலன்னறுவை எல்லையில் வெலிக்கந்தை என்னும் இடத்தில் இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் இலக்கத் தகடுகளற்ற வெள்ளை வான் ஒன்றினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சனவரி 29 பயணத்தில் சென்ற பணியாளர்கள் ஐந்து பேர். இவர்கள் அனைவரும் காட்டில் உள்ள ஒரு முகாமிற்குள் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் மூவர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சனவரி 30 இல் சென்ற பணியாளர்கள் 15 பேர். இவர்களும் இராணுவ சோதனைச் சாவடிக்கு 100 மீடட்ர்களுக்கு முன்னால் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 10 பேர் விடுவிக்கப்பட்டு, ஏனையோருக்கு ஈமக்கிரியைகள் செய்வதற்குத் தயாராக இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது..[1]

மேற்கோள்கள் தொகு

  1. "SRI LANKA". பன்னாட்டு மன்னிப்பு அவை (AI). 2007-06-10 இம் மூலத்தில் இருந்து 2012-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120718051221/http://www.amnesty.be/doc/article7274.html. பார்த்த நாள்: 2007-07-03.