தமிழ்நாடு வனத்துறை

தமிழ்நாடு வனத்துறை தமிழக மாநிலத்திற்குட்பட்ட காட்டுப்பகுதிகளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு வனத்துறை
காடு வளர- நாடு உயரும்
தமிழக மொத்த
வனப் பரப்பளவு
22,877 ச.கி.மீ
காப்புக் காடுகள்
பரப்பளவு
19,388 ச.கி.மீ
பாதுகாக்கப்பட்ட காடுகள்
பரப்பளவு
2,183 ச.கி.மீ
வகைப்படுத்தா காடுகள்
பரப்பளவு
1,386 ச.கி.மீ
தமிழகத்தின் மொத்த
இந்திய வனப் பணி
அலுவலர்கள்
140
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு அருகிவிட்டதால் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தமிழக வனத்துறையின் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.[1]

தமிழ்நாட்டின் வனப்பகுதி சுமார் 22,877 ச.கி.மீ[2] பரப்பளவைக் கொண்டது. இது தமிழ்நாட்டுப் புவிப்பரப்பளவில் 17.59% ஆகும். தேசிய வனக் கொள்கை, 1988-இன்படி மாநிலமொன்றின் புவிப்பரப்பளவில் 33.33% வனங்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறுபட்ட தட்பவெப்ப நிலை, இடவியல்பு, மண் (அ) நிலவியல்பு, நீராதாரம், உயர்நிலை மற்றும் உயிரினங்களின் ஆதாரங்கள் இவற்றை வைத்து பல்வேறுபட்ட சமூகக் காடுகள் அல்லது சமுதாய வனங்களை உருவாக்கும் காரணிகளாக செயல்படுகின்றன. பொதுவாக இவைகள் வனங்களின் வகைகள் எனப்படுகின்றன.

மாநில அரசு வனப்பகுப்பாக, நிறப்பிரிகையாக வனத் தாவர வளர்ச்சியை ஈரப்பதமுள்ள பசுமை மாறாக் காடுகள் முதல் குறை ஈரப்பதமுள்ள இலையுதிர் காடுகள் வரை தனது கவனத்தை செலுத்துகின்றது. மதிப்பிடற்கரிய மரங்களான சந்தனம், தேக்கு மற்றும் கருங்காலி மரம் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, சோலைமந்தி (சிங்க வால் குரங்கு)[2], சாம்பல் நிற அணில்[2] மற்றும் அரிய வகை உட்பிரதேசத்திற்குரிய விலங்கினங்கள் மற்றும் எண்ணிலடங்கா இனங்களான முக்கிய மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசத்திற்குரிய தாவரங்கள்) இவற்றின் பாதுகாப்பு வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்துகின்றது.

தமிழ்நாடு மாநில வனச் சட்டம், 1882, வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, வனப் பாதுகாத்தல் சட்டம், 1980 மற்றும் அதன் துணை விதிகள் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இவ்வனங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகின்றது[2].

முன்னுரை தொகு

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் வனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வனங்களின் தட்பவெப்பநிலையை, சீராக வைப்பதுடன், மழைபெய்ய வைக்க முக்கிய காரணங்களாகவும் அமைகின்றது. ஆறுகளின் பிறப்பிடமாக, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளாக வனங்கள் திகழ்கின்றன.

பல்லுயிர் பெருக்கத்தின் புகலிடமாக விளங்கும் காடுகள் வனவிலங்குகளுக்கு உய்விடமாகவும், அரிய வகை மூலிகைகளுக்கு உறைவிடமாகவும், மலைவாழ் மக்களுக்கு அரணாகவும் விளங்குகின்றன. மண் அரிமானத்தை தடுத்து வேளாண்மையின் வளர்ப்புத் தாயாகவும் காடுகள் விளங்குகின்றன.

நச்சு வாயுக்களின் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறைந்து வரும் வேளாண்மை உற்பத்தி திறன் தண்ணீர் பற்றாக்குறை ம்ற்றும் அதிகரித்து வரும் வாயு மாசுக்கள் போன்ற முக்கிய காரணங்களினால் வனங்களின் முக்கியத்துவம் முன்பை விட தற்பொழுது உணரப்படுகின்றது.

பல்லுயிர் பெருக்கம் தொகு

பல்லுயிர் பெருக்கம் தாவரவினம்[3]
வ.எண் தாவரங்கள் எண்ணிக்கை
1 தமிழகத்தில் பூக்கும் தாவரங்கள்[3] 5640
2 இந்திய அளவில் பூக்கும் தாவரங்கள்[3] 17672 மட்டுமே
3 உள்ளூர் தாவர வகைகள்[3] 533
4 அரிய தாவரவகைகள்[3] 230
5 மூலிகைத் தாவர வகைகள்[3] 1022
6 பயிரிடப்பட்டு வரும் வளம் சார்ந்த தாவர வகைகள்[3] 260
  • இந்தியாவில் உள்ள 1022 பூக்காத தாவர வகைகளில் தமிழகத்தில் மட்டும் 184 வகைகள் உள்ளன.

பல்லுயிர் பெருக்கம் விலங்கினம் தொகு

பல்லுயிர் பெருக்கம் விலங்கினம்[3]
வ.எண் விலங்கினம் எண்ணிக்கை
1 தெளிந்த நீரில் வாழும் மீன் இனங்கள்[3] 165
2 *ஈரூடகவாழ் உயிரினங்கள்
(இரு வாழ்வி-நீர்நில வாழ்வி)[3][4][5]
76
3 ஊர்வன வகைகள்[3] 177
4 பறவையினங்கள்[3] 484
5 பாலூட்டிகள்[3] 187

பல்லுயிர் களஞ்சியம் தொகு

காப்பு வனப்பகுதிகளும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும் பல்லுயிர் களஞ்சியமாக திகழ்கின்றன.

தமிழ்நாட்டில் தாவரவளம் தட்பவெப்பம், நிலத்தன்மை, கடல்மட்டத்திலிருந்து உயரம் போன்ற பல்வேறு காரணங்களினால் மாறுபட்டு காணப்படுகின்றது.

இவை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.-;

  1. கடற்கரையோரத் தாவரவளம்
  2. தீவுகளில் உள்ளத் தாவர வளம்
  3. உட்புறச் சமவெளிகளில் காணப்படும் தாவரவளம்
  4. குன்றுகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ளத் தாவரவளம்

தாவரவளங்கள் தொகு

தாவரவளங்கள்[3]
வ.எண் தாவரவளம் வகைகள் காடுகள்
1 கடற்கரையோரத் தாவரவளம்[3] முகத்துவார, வெப்பமண்டல, வறண்ட மற்றும் பசுமை மாறாக் காடுகள்
2 தீவுத்தாவரவளம் உவர் சதுப்பு, சதுப்பு நிலக் காடுகள் [3]
3 சமவெளித் தாவரவளம்[3] தெற்கு வெப்ப மண்டல் முட்காடுகள்[3]
4 குன்று மற்றும் மலைகளில் உள்ளத் தாவரவளம்[3] வறண்ட இலையுதிர், ஈரப்பத இலையுதிர் மற்றும் சிறு பசுமை மாறா மற்றும் சோலைக்காடுகளையும், ஈரப்பதன பசுமை மாறாக் காடுகளையும் உள்ளடக்கியது.
  • முக்கியமான வன வகைகளில் புல்வெளிகளும், மூங்கில் மற்றும் நாணல் காடுகளும் அடங்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலை தொகு

வனக்கொள்கை தொகு

தமிழகத்தின் வனக்கொள்கை மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள், தேசிய வனக் கொள்கையைச் சார்ந்து அமைந்துள்ளன.1988-இல் வகுக்கப்பட்ட தேசிய வனக் கொள்கையில் காடுகளை பராமரிக்கவும் அவற்றின் மேலாண்மைக்கு பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும், கோட்பாடுகளையும் விவரித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

வனக்கொள்கையின் முதன்மையான குறிக்கோள்

  • சூழலமைப்பை நிலைப்படுத்துதல்[3]
  • மனித இனம், விலங்கினம் மற்றும் தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கு முக்கியமான சூழல் சமநிலை மற்றும் வளிமண்டல சமன்பாட்டுடன் கூடிய சூழலமைப்பை நிலை நிறுத்தி பராமரிப்பதாகும்.[3]
  • வனங்களின் வளங்களை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்துதல் என்பது குறைந்த முக்கியமுடையதாக கருதவேண்டும்.[3]

வனச்சட்டங்கள் தொகு

வனக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள்.

  • தமிழ்நாடு வனச்சட்டம், 1882,[3]
  • தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம், 1949,[3]
  • தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டம், 1955,[3]
  • வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம், 1972,[3]
  • தமிழ்நாடு வனப்பாதுகாப்புச் சட்டம், 1980,[3]
  • பல்லுயிரினப் பரவல் சட்டம், 2002.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம், 1972". Archived from the original on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2009-05-12.
  2. 2.0 2.1 2.2 2.3 தமிழ் நாடு வனத் துறை- வனத்துறை பற்றி பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-05-2009
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 3.22 3.23 3.24 3.25 3.26 3.27 3.28 தமிழக அரசின் வனத்துறை கொள்கை குறிப்புகள் தமிழ் பிடிஎப்-2008-2009 பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 13-05-2009
  4. தமிழ்நாடு அரசு வனத்துறை கொள்கை குறிப்பு ஆங்கிலம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 31-05-2009
  5. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்-amphibian-இருவாழ்வி, நிலநீர் வாழ்வி, ஈரூடக வாழ்வி [தொடர்பிழந்த இணைப்பு] பார்த்து பரணிடப்பட்ட நாள் 31-05-2009

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_வனத்துறை&oldid=3557249" இலிருந்து மீள்விக்கப்பட்டது