தமிழ்வழி மருத்துவக் கல்வி

தமிழில் மருத்துவக் கல்வி என்பது தமிழ் மொழியின் ஊடாக மருத்துத் தகுதிக்கான படிப்பினைக் குறிக்கிறது. தமிழில் சித்த மருத்துவக் கல்வி நெடுங்காலமாக இருந்து வருகிறது. இன்றும் இலங்கையிலும் இந்தியாவிலும் சித்த மருத்துவக் கல்வியை தமிழில் கற்கலாம்.

தற்கால மருத்துவக் கல்வியை யாழ்ப்பாணத்தில் 1855 இல் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் முயற்சியால் தொடங்கப்பட்டது. அமெரிக்க மிசனரியான இவர் தமிழில் மருத்துவக் கல்விக்குத் தேவையான பல நூல்களை மொழிபெயர்த்தார். தமிழ்மொழி மூலம் 33 வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார்.

நவீன மருத்துவக் கல்வி பாடத் திட்டங்கள் முழுவதும் தமிழ்வழியில் அமைப்பதற்காக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ தமிழ் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. [1]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. மருத்துவத் தமிழில் கனிமொழி