தருமவியாதர்

தருமவியாதர் என்பவர் மகாபாரதத்தில் வருகின்ற கதாப்பாத்திரம் ஆவார். [1] தர்மவியாதர், மகாபாரத இதிகாசத்தில் பாண்டவர்கள் துவைத வனத்தில் வனவாசத்தில் இருந்த போது, மார்காண்டேய முனிவர் தர்மருக்கு, வேடனும், இறைச்சி வணிகரும் அறநெறியுடன் வாழும் தர்மவியாதனின் ஆன்மீக ஒழுக்கம் குறித்து கதையாக கூறுகிறார்.[2][3] வேடன் மற்றும் இறைச்சி வணிகருமாக இருப்பினும் தர்மவியாதன் தன் வாழ்க்கையில் அற்நெறிகளுடன் வாழ்ந்தார். தவம் புரிந்தும், சினத்தை கைவிடாத கௌசிகர் எனும் முனிவருக்கு, தருமவியாதன் அறநெறிகளை எடுத்துரைத்தார்.[4] [5] தரும வியாதர் செய்த அற உபதேசங்களை வியாத கீதை என்பர்.[6]

தொன்மம் தொகு

கௌசிக முனிவர் பெருந்தவத்திலிருந்தபோது அவர்மேல் மரத்திலிருந்த கொக்கொன்று எச்சமிட்டது. சினமடைந்த முனிவர் தன் பார்வை நோக்கால் கொக்கை எரித்து சாம்பலாக்கினார். அதனால் ஆணவம் கொண்டார்.[4] குளித்துவிட்டு பின்னர் அருகிலிருந்த ஊரூக்குச் சென்று ஒரு வீட்டை அணுகி தனக்கு அன்னதானம் செய்யக் கூவினார். வீட்டிலிருந்த பெண் தன் கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்ததால் பொறுத்திருக்கும் படி வேண்டினார். தான் பெரிய முனிவன் என்று அறியாமல் காத்திருக்க வைத்தமைக்காக கோபம் கொண்டார். பிச்சையிட வந்த பெண்ணை முறைத்தார். தான் யார் எனத்தெரியுமா எனக்கோபத்துடன் கத்தினார். அதற்கு சிரித்துக்கொண்டே அப்பெண் கொக்கொன நினைத்தாயோ கொங்கனவா என மறுமொழி கூறினார். இதனைக் கேட்ட முனிவருக்கு, தன் தவ வலிமையால் கொக்கை எரித்த விடயம் இப்பெண்மணி எவ்வாறு தெரிந்தது எனக்கேட்டதுடன், தன் தவவலிமையின் பலத்தின் குறைபாட்டை எண்ணிக் கூனிக்குறுகினார். மேலும் தனக்கு நல்லறம் உபதேசிக்கும் படி அப்பெணிடம் வேண்டினார். அப்பெண் தருமம் குறித்து போதிய ஞானம் நீங்கள் பெறவில்லை. ஞானம் பெற மிதிலை நகரில் இறைச்சி விற்கும் தருமவியாதன் என்பவரை அணுகி உபதேசம் பெற்றுக் கொள்ளும் படி முனிவரிடம் கூறினார். அவ்வாறே கௌசிக முனிவரும் இறைச்சிக் கடைக்காரர் வியாதரை அணுகி தர்ம உபதேசங்களை பெற்றார்.[4]

தருமவியாதன் கறிக்கடை வைத்திருந்த நபர். அவர் தன்னுடைய பெற்றோர்களுக்கு பணிவிடை செய்தும் கறிக்கடையில் வியாபாரம் செய்தும் வந்தார். கௌசிக முனிவர் அவரைக் காண வந்ததும், அப்பெண் அனுப்பினாராவென வினவினார். இதனை எவ்வாறு தருமவியாதன் அறிந்தாரென கௌதமர் வியந்தார். [4] ஒவ்வொருவரும் தனக்கான தர்மத்தைக் கடைப்பிடிப்பதே சிறந்த தர்மமாகும். இல்லரத்தில் இருக்கும் பெண் கணவனுக்கக்கு பணிவிடை செய்வதும், வணிகத்தில் பாரபட்சம் பாராது செயல்படுவதும் தர்மமாகும். இவ்வாறு தங்கள் பணியை செய்வது முனிவர்களின் தவத்திற்கு ஒப்பானது என கூறினார் தருமவியாதர்.[4]

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமவியாதர்&oldid=3949291" இலிருந்து மீள்விக்கப்பட்டது