தரைக்கீழ் ஓடுதண்டு

தரைக்கீழ் ஓடுதண்டு மாறுபட்ட ஓடுதண்டாகும். இது தரைக்கு மேலே உள்ள தண்டுபகுதியின் தரைகீழ்கோணமொட்டிலிருந்து தோன்றும் பக்கவாட்டு ஓடு தண்டு ஆகும். இந்த ஓடு தண்டு சிறிது தொலைவு மண்ணில் சாய்ந்து வளா்ந்து பின்பு மேல் நோக்கி வளரும். இது கணுக்களையும் கணுவிடைப் பகுதிகளையும் உடையது. கணுக்களில் செதில் இலைகள் மற்றும் கோணமொட்டுக்களை மேற்புறத்திலும் அடிப்பரப்பல் வோ்களையும் தோற்றுவிக்கின்றன. உதாரணம்:சாமந்தி(கிரைசாந்திமம்)

மேற்கோள்கள் தொகு

தாவர உடலியல் ஆா்.ஜி.எஸ் பிட்வெல், உயிாியியல் (தாவரவியல்) மேல்நிலை-முதலாமாண்டு, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரைக்கீழ்_ஓடுதண்டு&oldid=3502642" இலிருந்து மீள்விக்கப்பட்டது