தரைபாவுமை (tessellation) என்பது தட்டையான வடிவுடைய துண்டுகளைக் கொண்டு இடைவெளி விடாமலும், ஒருதுண்டின் மீது மற்றொன்று ஏறிக்கொள்ளாமலும் ஒரு சமதளத்தை முற்றிலுமாக நிறப்பும் தன்மை கொண்டிருப்பதும். எனவே இதனை நிறப்புமை என்றும், அடைப்புமை என்றும் கூறலாம்.

தரைபாவுமை

சீர்வடிவக் கோலங்கள் தொகு

ஒரு சமபரப்பை ஒரே வடிவம் கொண்ட உருவாலோ, அல்லது ஒரு சில வடிவங்கள் மட்டுமே கொண்ட உருவங்களினாலோ, சீராக அடுக்கி ஒரு சமபரப்பில் ஒரே இயல்பான வடிவம் தோன்றும் படி நிறைப்பது ஒரு கலை. டச்சுக்காரரான எம். சி. எஷெர் என்பாருடைய இப்படிப்பட்ட அறிவைத்தூண்டும் கலைப்படைப்புகள் புகழ் பெற்றவை. இக்கலைக்கு சீர்வடிவ சுவரோவியம் (Wallpaper group) எனக் கூறலாம். இது கணிதத்துறையில் ஒரு உறுப்பாகவும், படிகவடிவ இயலிலும் ஒரு துறையாகவும் உள்ளது. பொதுவாக 17 வகையான சீர்வடிவ சுவரோவிய வகைகள் உள்ளனவாகக் கண்டுள்ளனர். சீர்வடிவ சுவரோவியம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் அடிப்படை வடிவங்களின் இணையொப்புமையைப் பொருத்து பல்வேறு வகைகள் உருவாகின்றன. இணையொப்புமை என்பது ஒரு வடிவத்தை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஒரு அச்சை மையமாகக் கொண்டு திருப்பினாலோ, நகர்த்தினாலோ அவ்வடிவம் அதே தோற்றம் கொண்டிருப்பது. ஒரு சமபக்க முக்கோணத்தை 120 பாகை, 120 பாகையாக திருப்பினால் ஒரே வடிவம் கொண்டு இருப்பது போல. சில வகையான சீர்வடிவ சுவரோவியம் படங்களில் காட்டப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரைபாவுமை&oldid=2031956" இலிருந்து மீள்விக்கப்பட்டது