தர்சனா சிங்

இந்திய அரசியல்வாதி

தர்சனா சிங் (Darshana Singh)பிறப்பு: சூலை 10, 1974) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] இவர் பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு பாஜக மகிளா மோர்ச்சாவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார்.

தர்சனா சிங்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
5 சூலை 2022
தொகுதிஉத்திரப்பிரதேசம்
தேசிய துணைத் தலைவர், பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சா
பதவியில்
21 சூன் 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூலை 1974 (1974-07-10) (அகவை 49)
துணைவர்இரஞ்சன் ஜெய் சிங் (தி. 2001)
பிள்ளைகள்1 மகன்
வாழிடம்(s)தில்லி, சந்தெளலி, வாரணாசி
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

தர்சனா சிங், 1996ஆம் ஆண்டு ஆசம்கரில் உள்ள தயானந்த் ஆங்கிலோ-வேத கல்லூரியில் வரலாற்றில் முதுகலையில் தங்கப் பதக்கம் வென்றவர். பின்னர், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் காட்சித் தகவலியல் தொடர்பு துறையில் முதுகலை பட்டய படிப்பினை முடித்தார்.

வகித்தப் பதவிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "11 Rajya Sabha candidates in UP, including 8 from BJP elected unopposed". Business Standard. 4 June 2022. பார்க்கப்பட்ட நாள் 4 June 2022.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சனா_சிங்&oldid=3666163" இலிருந்து மீள்விக்கப்பட்டது