தலி இராச்சியம்

பய் இராச்சியம்

தலி இராச்சியம் (Dali Kingdom) அல்லது தலி மாநிலம் (Dali State, எளிய சீனம்: 大理国; மரபுவழிச் சீனம்: 大理國பின்யின்: Dàlǐ Guó; பய்: தப்லிட் குவைஃப்) என்பது சீனாவின் தற்கால யுன்னான் மாகாணத்தில் அமைந்திருந்த ஒரு இராச்சியம் ஆகும். இது 937 முதல் 1253 வரை அமைந்திருந்தது. பின்னர் மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டது. இதன் அரசர்கள் இப்பகுதியை மங்கோலியர்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாக ஆண்டனர். கப்பம் கட்டுவது மிங் அரச மரபினர் யுன்னானைக் கைப்பற்றும் வரை நீடித்தது.[1]

தப்லிட் குவைஃப்
大理國
937–1253
12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலி இராச்சியத்தின் வரைபடம்
12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலி இராச்சியத்தின் வரைபடம்
நிலைபேரரசு
தலைநகரம்தலி
பேசப்படும் மொழிகள்பய்
சமயம்
பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 937–944
துவான் சிபிங்
• 1081–1094
துவான் ஜெங்மிங்
• 1096–1108
துவான் ஜெங்சுன்
• 1172–1200
துவான் ஜிக்ஷிங்
• 1251–1254
துவான் க்ஷிங்ஜி
வரலாறு 
• நிறுவப்பட்டது
937 937
• காவோ ஷெங்டையின் கலகம்
1095
• மீண்டும் நிறுவப்பட்டது
1096
• மங்கோலியப் பேரரசால் முடிக்கப்பட்டது
1253 1253
முந்தையது
பின்னையது
நன்ஷவோ
மங்கோலியப் பேரரசு
தலி இராச்சியம்
சீனப் பெயர்
சீன எழுத்துமுறை 大理
எளிய சீனம் 大理
சொல் விளக்கம் தலி மாநிலம்
alternative Chinese name
Traditional Chinese 大中國
Simplified Chinese 大中国
பய் lang1_content = தப்லிட் குவைஃப் name
பய் lang1_content = தப்லிட் குவைஃப் {{{lang1_content}}}

வரலாறு தொகு

தோற்றம் தொகு

902ல் நன்ஜவோ தூக்கி எறியப்பட்டார். சிறிது காலத்திற்குள் மூன்று அரச மரபுகள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தன. கடைசியில் துவான் சிபிங் 937ல் அதிகாரத்திற்கு வந்தார். தலியில் தன் அரசை அமைத்தார்.[2] இந்த துவான் இனம் ஹான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.[3]

சாங் அரசுமரபுடன் உறவுகள் தொகு

தலி அரசு அமைந்திருந்த காலம் முழுவதும் சாங் அரசமரபுடனான அதன் உறவு சுமூகமாகவே இருந்துள்ளது. 965ல் சாங் அரசமரபினர் பிந்தைய சூவை வென்றபோது தலி அரசு வாழ்த்துக்கள் தெரிவித்தது. 982ல் தாமாகவே முன்வந்து சாங் அரசிற்குக் கப்பம் கட்டியது. ஆனால் அடிப்படையில் தலி ஒரு சுதந்திரமான மாநிலமாகும். சில நேரங்களில் சாங் அரசமரபினர் தலி அரசைக் கப்பம் கட்ட வேண்டாம் என்று கூடக் கூறினர். .[2]

சாங்கிற்குத் தலியின் முக்கியத்துவம் அதன் குதிரைகள் ஆகும். அக்குதிரைகள் விலை உயர்ந்தவையாகவும், தேவையுள்ள ராணுவச் சொத்தாகவும் சாங் அரசால் மதிக்கப்பட்டன. குறிப்பாக வடக்கு சாங் அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு இவ்வாறு மதிக்கப்பட்டன.

வீழ்ச்சி தொகு

1252ல் மோங்கே கான் தனது தம்பி குப்லாய் கானிடம் தலி படையெடுப்புக்குத் தலைமை ஏற்கச் சொன்னார். 1253ல் குப்லாய் கானின் ராணுவம் ஜின்சா ஆற்றைக் கடந்தது. துவான் க்ஷிங்ஜி சரணடைந்தார். அவர் 1256ல் மோங்கே கானுக்கு யுன்னானின் வரைபடங்களைக் கொடுத்தார். தலியின் துவான் க்ஷிங்ஜியை குப்லாய் கான் மகாராஜாவாகப் (摩诃罗嵯) பதவியில் நீடிக்க விட்டார்.[4] துவான் அரசகுடும்பம் மகாராஜா என்ற பட்டத்தை யுன்னானில் தொடர்ந்து பயன்படுத்தியது. மங்கோலிய ஏகாதிபத்திய இளவரசர்கள் மற்றும் முஸ்லிம் ஆளுநர்களின் மேற்பார்வையில் மங்கோலியர்களுக்குக் கப்பம் கட்டியது. துவான் குடும்பம் தலியை ஆட்சி செய்தது. அதேநேரத்தில் ஆளுநர்கள் குன்மிங்கில் இருந்து பணி செய்தனர். மிங் அரசமரபினர் யுன்னானை வெற்றி கொண்ட பிறகு,[5] துவான் அரச குடும்பத்தினர் சீனாவின் தொலைதூரப் பகுதிகளுக்கு கோங்வு பேரரசரால் விரட்டப்பட்டனர்.[6]

மங்கோலியர்களின் ஆட்சியில் யுன்னான் தொகு

துவான் குடும்பம் யுன்னானின் பூர்வீகக் குடிமக்களை 11 தலைமுறைக்கு மங்கோலிய ஆட்சி முடியும் காலம் வரை ஆண்டது. அவர்கள் சுய விருப்பத்தின் பேரில் மங்கோலியர்களின் சாங் அரசமரபு மீதான படையெடுப்புக்கு வீரர்களை வழங்கினர். 1271ல் யுன்னானில் ஒரு மங்கோலியக் கலகம் ஏற்பட்டது. அதை முறியடிக்க யுவான் அரசமரபுக்கு இவர்கள் உதவி செய்தனர்.[6]

1274ல் சயித் சம்ஸ் அல்-தின் ஒமர் யுன்னானை அமைதிப்படுத்த குப்லாய் கானால் அனுப்பப்பட்டார். அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களைத் தலைவராக்கும் முறையைக் கொண்டு வந்தார். இம்முறை டுசி என அழைக்கப்பட்டது. பதவிகளும், தரவரிசைகளும் உள்ளூர்த் தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. இம்முறை அப்பகுதிக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகளைப் பின்பற்றியது. மூன்று கடமைகளைத் தவிர அனைத்து விஷயங்களிலும் உள்ளூர் மக்களுக்குச் சுயாட்சி வழங்கப்பட்டது. ஒன்று அவர்கள் சரணடைந்த வீரர்களை யுவான் அரசாங்கத்திற்குக் கொடுப்பர். இரண்டு உள்ளூர்த் தலைவர்கள் யுவான் அரசவைக்குக் கப்பம் கட்டுவர். மூன்று நியமிப்பு, பதவிக்கு அடுத்து வருபவர், பதவி உயர்வு, சீரழிவு, வெகுமதி மற்றும் உள்ளூர்த் தலைவர்களுக்கான தண்டனை ஆகிய விஷயங்களில் யுவான் அரசால் உருவாக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றுவர்.[6]

யுவான் ஆட்சி யுன்னானுக்கு குறிப்பிடத்தகுந்த முஸ்லிம் தாக்கத்தையும் அறிமுகப்படுத்தியது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Theobald, Ulrich (17 August 2012), "Dali 大理", China Knowledge.
  2. 2.0 2.1 Yang 2008a.
  3. Frederick W. Mote (2003). Imperial China 900-1800. Harvard University Press. pp. 710–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-01212-7.
  4. Yang 2008c.
  5. Frederick W. Mote; Denis Twitchett (26 February 1988). The Cambridge History of China: Volume 7, The Ming Dynasty, 1368-1644. Cambridge University Press. pp. 144–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-24332-2.
  6. 6.0 6.1 6.2 6.3 Yang 2008b.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலி_இராச்சியம்&oldid=3830991" இலிருந்து மீள்விக்கப்பட்டது