தலைக்கோலங்கள்

தலைக்கோலங்கள் என்பது இந்து சமய கடவுள்கள், மகளிர் தங்கள் தலைமுடியை ஒப்பனை செய்து கொள்ளுவதை குறிப்பதாகும். .


சங்ககாலம் தொகு

சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பணிச்சை, துஞ்சை என ஐந்து வகையாக ஒப்பனை செய்து கொண்டார்கள் என, மதுரைக்காஞ்சி நூல் கூறுகின்றது. கூந்தல் மீது அணிகின்ற பொருட்களை, தலை அணிகலன்கள் என்கின்றனர். இவற்றில் மகுடம் எனும் அணிகலனும் ஒன்றாகும்.

மகுடங்கள் தொகு

தொன்மையான சிற்பங்களை அடையாளம் காண்பதில் படிமத்தின் தலைக்கோலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்து சமய இறைகளுக்கு தனித்துவமான மகுடங்கள் உள்ளன. மகுடங்களை பதிமூன்று வகைகளாக அடையாளப்படுத்தியுள்ளனர். அவையாவன,

  1. ஜடா மகுடம்
  2. ஜடா பாரம்
  3. ஜடாமண்ட லம்
  4. ஜடா பந்தம்
  5. சர்ப்ப மௌலி
  6. விரிசடை
  7. சுடர்முடி
  8. உசிரஸ்திகரம்,
  9. உகுந்தளம்.
  10. தம்மில்லம் என்கிற தமிழம்
  11. அளக சூடம்.
  12. கிரிட மருடம்
  13. கரண்ட மகுடம்

இவற்றில் கீழ்க்கண்ட மூன்று மகுடங்கள் முக்கியமானவை.

  1. ஜடா மகுடம்
  2. கிரீட மகுடம்
  3. கரண்ட மகுடம்

சிவபெருமான் மற்றும் சிவபெருமானின் அம்சங்கள் ஜடாமகுடத்தோடு உள்ளனர். சில இடங்களில் பிரம்மா மற்றும் ரிசிகள் இந்த மகுடத்துடன் உள்ளனர். திருமால், அரசர்கள், அரசர் போல புகழ்பெற்றவர்கள் கிரீட மகுடம் அணிந்துள்ளனர். விநாயகர் மற்றும் இந்து சமய பெண் தெய்வங்கள் கரண்ட மகுடத்தோடு காணப்படுகின்றனர்.

தலை அணிகலன்கள் தொகு

தலை அணிகலன்கள் என்பது அழகிற்காக இறை உருவங்கள் சூடும் அணிகலன்கள் ஆகும். . இவ்வாறான ஒப்பனைக்கு உலோகங்களால் ஆன தலை அணிகலன்களை பயன்படுத்தியுள்ளனர்.

  1. தொய்யகம் [1] அல்லது தலைப்பாளை
  2. புரப்பாளை
  3. புல்லகம்
  4. கடிப்பு காதணி
  5. சூளாமணி அல்லது சூடாமணி

ஆதார நூல் தொகு

  • சிற்பச் செந்நூல் - வை கணபதி ஸ்தபதி - தொழில்நுட்ப கல்வி இயக்கம்.

ஆதாரங்கள் தொகு

  1. நூல் -இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும் பகுதி - 6. கடலாடு காதை 106-108 வரிகள்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைக்கோலங்கள்&oldid=3698226" இலிருந்து மீள்விக்கப்பட்டது