தவறின்றித் தமிழ் எழுதுவோம் (நூல்)

தவறின்றித் தமிழ் எழுதுவோம், மா. நன்னன் எழுதிய நூலாகும். [1]

தவறின்றித் தமிழ் எழுதுவோம்
நூல் பெயர்:தவறின்றித் தமிழ் எழுதுவோம்
ஆசிரியர்(கள்):மா. நன்னன்
வகை:மொழி
துறை:இலக்கணம்
இடம்:சென்னை 600 005
மொழி:தமிழ்
பக்கங்கள்:112
பதிப்பகர்:ஏகம் பதிப்பகம்
பதிப்பு:2006
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு தொகு

இந்நூல் உள்ளுறை, நான்காம் பதிப்பின் முகவுரை, முன்னுரை உள்ளிட்ட 55 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. வழுக்குத்தமிழ்[கு 1] ஓய்வும் ஒழிவும், இறும்பூது, குறிப்பாக, எல்லாரும், அனுப்புக, சிக்கனம், கஞ்சத்தனம் உள்ளிட்ட பல சொற்களின் பயன்பாடு குறித்து உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தவறின்றித் தமிழ் எழுத பயனுள்ள குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

குறிப்புகள் தொகு

  1. யாரேனும் ஒருவர் ஒரு சொல்லையோ தொடரையோ எக்காரணத்தாலாவது தவறாகப் பயன்படுத்திவிட்டால், பின்னர் பலரும் அத்தகைய தவறுகளைத் தொடர்வது மரபாகிவிட்டது என்றும், அத் தவறான தமிழுக்குத்தான் வழுக்குத் தமிழ் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் ஆசிரியர் கூறுகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. Marina Books[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணை தொகு

'தவறின்றித் தமிழ் எழுதுவோம்', நூல், (2006, ஆறாம் பதிப்பு; ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோயில் தெரு, 2ஆம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை)