தாதாசாகெப் பால்கே விருது

வாழ்நாள் சாதனை விருது

தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.[1][2]

தாதாசாகெப் பால்கே விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தியத் திரைப்படத்துறை
நிறுவியது 1969
முதலில் வழங்கப்பட்டது 1969
மொத்தம் வழங்கப்பட்டவை 51
வழங்கப்பட்டது இந்திய அரசு
நிதிப் பரிசு 1,000,000
விவரம் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்
முதல் வெற்றியாளர்(கள்) தேவிகா ராணி (1969)
கடைசி வெற்றியாளர்(கள்) ரஜினிகாந்த் (2019)

விருது பெற்றவர்கள் பட்டியல் தொகு

ஆண்டு வாரியாக இந்த விருது பெற்றவர்கள் பட்டியல்:

ஆண்டு விருது பெற்றவர் தொழில் புகைப்படம்
1969 தேவிகா ராணி நடிகை
1970 பிரேந்திரநாத் சிர்கார் தயாரிப்பாளர்
1971 பிரித்விராஜ் கபூர் நடிகர் (மறைவிற்குப் பின்னர்)
1972 பங்கஜ் முல்லிக் இசையமைப்பாளர்
1973 சுலோச்சனா நடிகை
1974 பி. என். ரெட்டி இயக்குநர்
1975 திரேன் கங்குலி நடிகர், இயக்குநர்
1976 கனன் தேவி நடிகை
1977 நிதின் போஸ் படத்தொகுப்பாளர், இயக்குநர், திரைக் கதையாசிரியர்
1978 இராய் சந்த் போரல் இசையமைப்பாளர், இயக்குநர் (திரைப்படம்)
1979 சோரப் மோடி நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1980 ஜெய்ராஜ் நடிகர், இயக்குநர் (திரைப்படம்)
1981 நௌசாத் இசையமைப்பாளர்  
1982 எல். வி. பிரசாத் நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1983 துர்கா கோட் நடிகை
1984 சத்யஜித் ராய் இயக்குநர் (திரைப்படம்)  
1985 வி. சாந்தாராம் நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1986 பி. நாகி ரெட்டி தயாரிப்பாளர் (திரைப்படம்)
1987 ராஜ் கபூர் நடிகர், இயக்குநர் (திரைப்படம்)
1988 அசோக் குமார் நடிகர்  
1989 லதா மங்கேஷ்கர் பின்னணிப் பாடகர்  
1990 ஏ. நாகேசுவர ராவ் நடிகர்
1991 பால்ஜி பெந்தர்கர் இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்), திரைக்கதை ஆசிரியர்
1992 பூபேன் அசாரிகா இயக்குநர் (திரைப்படம்)  
1993 மஜ்ரூ சுல்தான்புரி பாடலாசிரியர்
1994 திலிப் குமார் நடிகர்  
1995 ராஜ்குமார் நடிகர், பின்னணிப் பாடகர்
1996 சிவாஜி கணேசன் நடிகர்
1997 பிரதீப் பாடலாசிரியர்
1998 பி. ஆர். சோப்ரா இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1999 இருசிகேசு முகர்ச்சி இயக்குநர் (திரைப்படம்)
2000 ஆஷா போஸ்லே பின்னணிப் பாடகர்  
2001 யஷ் சோப்ரா இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
2002 தேவ் ஆனந்த் நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
2003 மிருணாள் சென் இயக்குநர் (திரைப்படம்)  
2004 அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்குநர் (திரைப்படம்)  
2005 சியாம் பெனகல் இயக்குநர் (திரைப்படம்)  
2006 தப்பன் சின்கா இயக்குநர் (திரைப்படம்)  
2007 மன்னா தே பின்னணிப் பாடகர்
2008 வி. கே. மூர்த்தி படத்தொகுப்பாளர்  
2009 டி. ராமா நாயுடு தயாரிப்பாளர் (திரைப்படம்), இயக்குநர் (திரைப்படம்)  
2010 கைலாசம் பாலச்சந்தர் இயக்குநர் (திரைப்படம்)  
2011 சௌமித்திர சாட்டர்ஜி நடிகர்  
2012 பிரான் கிரிஷன் சிகந்த் நடிகர்
2013 குல்சார் பாடலாசிரியர்  
2016 கே. விஸ்வநாத் இயக்குநர்  
2017 வினோத் கண்ணா நடிகர்  
2018 அமிதாப் பச்சன் நடிகர்  
2019 ரஜினிகாந்த்[3][4] திரைப்பட நடிகர்  

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "17th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. pp. 38–42. Archived (PDF) from the original on 26 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டெம்பர் 2011.
  2. "Dada Saheb Phalke Award Overview". Directorate of Film Festivals. Archived from the original on 26 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டெம்பர் 2020.
  3. Rajinikanth gets Phalke Award
  4. தாதா சாகேப் பால்கே விருது: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – ரஜினிகாந்த்

வெளி இணைப்புகள் தொகு