தானொத்தியமாதல்

தானொத்தியங்கள் (tautomers) என்பன ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றப்படக்கூடிய கரிமச் சேர்மங்கள் / சேதனச் சேர்வைகளின் கட்டமைப்புச் சமபகுதியங்கள் ஆகும்.[1][2][3] இவ்விரண்டையும் ஒன்றிலிருந்து இன்னொன்று மாற்றும் வேதிவினை/இரசாயனத் தாக்கம் தானொத்தியமாதல் (tautomerization) எனப்படுகின்றது. பொதுவாக இவ்வினையின் போது, ஒரு ஹைட்ரஜன் அணுவை, ஒற்றைப் பிணைப்புக்கும் அடுத்துள்ள இரட்டைப் பிணைப்புக்கும் இடையே மாற்றும் செயற்பாடே இடம்பெறும். தானொத்தியமாதல் மிக வேகமான செயற்பாடென்பதால், தானொத்தியம் இரண்டும் வேதியியல் ரீதியில் ஒரே சேர்மமாகவே கருதப்படுகின்றன.

தானொத்தியங்கள்

வேதியியல் தொகு

 
இலற்றம் - இலற்றிம் தானொத்தியங்கள்.

தானொத்தியமாதல் சாத்தியமான கரைசல்களில், தானொத்தியங்கள், ஓர் இரசாயன(வேதிச்) சமநிலையை அடைகின்றன. வெப்பநிலை, கரைப்பான், பிஎச் என்பன எவ்வெவ் தானொத்தியம் எவ்வெவ் அளவில் காணப்படும் என்பதைத் தீர்மானிக்கும்.[4] பொதுவான தானொத்திய இணைகள் வருமாறு:

References தொகு

  1. Antonov L (2013). Tautomerism: Methods and Theories (1st ed.). Weinheim: Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-33294-6.
  2. Smith MB, March J (2001). Advanced Organic Chemistry (5th ed.). New York: Wiley Interscience. pp. 1218–1223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-58589-0.
  3. Katritzky AR, Elguero J; et al. (1976). The Tautomerism of heterocycles. New York: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-020651-X.
  4. Roman M. Balabin (2009). "Tautomeric equilibrium and hydrogen shifts in tetrazole and triazoles: Focal-point analysis and ab initio limit". J. Chem. Phys. 131 (15): 154307. doi:10.1063/1.3249968. Bibcode: 2009JChPh.131o4307B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானொத்தியமாதல்&oldid=3849038" இலிருந்து மீள்விக்கப்பட்டது