தாமு மாசிஃப்

தாமு மாசிஃப் (Tamu Massif) என்பது அமைதிப் பெருங்கடலின் தென்மேற்கே கடலடியில் அமைந்துள்ள ஒரு அணைந்த கேடய எரிமலை ஆகும்.[3] இந்த எரிமலை கண்டுபிடிக்கப்பட்டதாக 2013 செப்டம்பர் 5 இல் அறிவிக்கப்பட்டது. இது உறுதிப்படுத்தப்படின், இதுவரை அறியப்பட்ட எரிமலைகளில் இதுவே மிகப் பெரிதாக இருக்கும்.[1] எவ்வெரிமலை சப்பானின் கிழக்கே 1,600 km (990 mi) தொலைவில் சாட்ஸ்க்கி ரைஸ் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இத அதியுயர் புள்ளி கடற்பரப்பில் இருந்து 1,980 m (6,500 அடி) ஆழத்தில் உள்ளது, இதன் அடிப்பாகம் 6.4 கிமீ ஆழம்வரை படர்ந்துள்ளது.[1] இதன் உயரம் ஏறத்தாழ 4,460 மீட்டர்கள் (14,620 அடி) ஆகும்.

தாமு மாசிஃப்
Tamu Massif
உச்சியின் ஆழம்1,980 மீட்டர்கள் (6,500 அடி)[1]
உயரம்4,460 மீட்டர்கள் (14,620 அடி)[1]
அமைவிடம்
அமைவிடம்வடமேற்கு பசிபிக் பெருங்கடல்
தொடர்சாட்ஸ்க்கி ரைஸ்
நிலவியல்
வகைகேடய எரிமலை
பாறை வயது144.6 ± 0.8 மில்.ஆண்டு[2]
கடைசி நிகழ்வு144.6 ± 0.8 மில்.ஆண்.[2]
ஆள்கூறுகள்33°N 158°E / 33°N 158°E / 33; 158

அமெரிக்காவின் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தின் புவி மற்றும் வளிமண்டல அறிவியல் பிரிவைச் சேர்ந்த கடலியல் நிலவியலாளர் வில்லியம் சேஜர் என்பவரும் அவரது குழுவினரும் இந்த எரிமலையைக் கண்டுபிடித்தனர். இது ஒரு தனித்த எரிமலையா அல்லது பல எரிமலைகளின் தொகுதியா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.[4][5]

* தாமு
  மாசிஃப்
சாட்ஸ்கி ஏற்றம்
Emperor Seamounts Chain
அவாய் முகடு
சப்பான்
கம்சாத்க்கா
அலாஸ்கா


* தாமு
  மாசிஃப்
சாட்ஸ்கி ஏற்றம்
Emperor Seamounts Chain
அவாய் முகடு
சப்பான்
கம்சாத்க்கா
அலாஸ்கா
தாமு மாசிபின் அமைவிடம்[6][7]

நிலவியல் தொகு

தாமு மாசிஃப் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சுராசிக் காலத்தின் பிற்பகுதி முதல் ஆரம்ப கிரீத்தேசியக் காலம் வரையான காலப்பகுதியில் உருவாகியது.[1] இது ஒப்பீட்டளவில் சிறிய காலப்பகுதியில் (சில மில்லியன் ஆண்டுகளில்) தோன்றி பின்னர் மறைந்துள்ளது.[1] அவாய்த் தீவுகளில் உள்ள மோனா லோவா எரிமலையே இதுவரை காலமும் மிகப் பெரிய எரிமலையாகக் கணிக்கப்பட்டு வந்தது. தாமு மாசிஃபின் பரப்பளவு செவ்வாய்க் கோளில் அமைந்துள்ள ஒலிம்பஸ் மொன்சு எரிமலையிலும் விட அரைவாசியாகும்.[8]

பெயர் தொகு

தாமு (Tamu) என்பது Texas A&M University என்பதன் சுருக்கக் குறியீடு ஆகும்,[9] மாசிஃப் (Massif) என்பது பிரெஞ்சு மொழியில் பிரம்மாண்டம் ("massive") என்பதாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Howard, Brian Clark (2013-09-05). "New Giant Volcano Below Sea Is Largest in the World". http://news.nationalgeographic.com/news/2013/09/130905-tamu-massif-shatsky-rise-largest-volcano-oceanography-science/. பார்த்த நாள்: 2013-09-07. 
  2. 2.0 2.1 எஆசு:10.1130/G21378.1
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  3. Witze, Alexandra (2013-09-05). "Underwater volcano is Earth's biggest". Nature News & Comment. doi:10.1038/nature.2013.13680. 
  4. "Scientists Confirm Existence of Largest Single Volcano On Earth". ScienceDaily. 2013-09-05. பார்க்கப்பட்ட நாள் 2013-09-07.
  5. Sager, William W.; Zhang, Jinchang; Korenaga, Jun; Sano, Takashi; Koppers, Anthony A. P.; Widdowson, Mike; Mahoney, John J. (2013-09-06). "An immense shield volcano within the Shatsky Rise oceanic plateau, northwest Pacific Ocean". Nature Geoscience. doi:10.1038/ngeo1934. http://www.nature.com/ngeo/journal/vaop/ncurrent/full/ngeo1934.html. 
  6. Myslewski, Rik (2013-09-05). "The Solar System's second-largest volcano found hiding on Earth". http://www.theregister.co.uk/2013/09/05/tamu_massif_discovered_to_be_a_single_volcano/. பார்த்த நாள்: 2013-09-07. 
  7. "Bottomfish fisheries by Japan, Russia, and Republic of Korea occur on various seamounts in the northwest Pacific witin international waters". pifsc.noaa.gov. Honolulu, HI: Pacific Islands Fisheries Science Center, NOAA. பார்க்கப்பட்ட நாள் 2013-09-07.
  8. Plescia, J. B. (2004). "Morphometric properties of Martian volcanoes". Journal of Geophysical Research 109 (E3). doi:10.1029/2002JE002031. 
  9. "World's Largest Volcano Now Named TAMU". Tamu Times (Texas A&M University). 2013-09-05 இம் மூலத்தில் இருந்து 2013-09-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130908055030/http://tamutimes.tamu.edu/2013/09/05/worlds-largest-volcano-now-named-tamu/. பார்த்த நாள்: 2013-09-07. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமு_மாசிஃப்&oldid=3536000" இலிருந்து மீள்விக்கப்பட்டது