தாமு (சமையல் கலைஞர்)

கே. தாமோதரன் (K. Damodharan) என்பவர் தொழில் ரீதியாகச் சமையல் கலை நிபுணர் ஆவார். இவர் தாமு என்று அழைக்கப்படுகிறார்.[1] இவர் பல்வேறு தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஏராளமான சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி சமையல் போட்டிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் குக்கு வித் கோமாளியில் நடுவராக இருந்தார். 2010-ல், ஒரு தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார்.[2] 2004-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் பெற்றார்.[3] மேலும், இவர் தமிழ்ப் படங்களில் சில தோற்றங்களில் நடித்துள்ளார்.

தொழில் தொகு

திசம்பர் 2010-ல், தாமோதரன் ஒரு நாளில் 190 கிலோ கிராம் உணவைக் கொண்ட 617 உணவு வகைகளைச் சமைத்தார். இவர் திசம்பர் 21 அன்று காலை 8 மணிக்குச் சமைக்கத் தொடங்கி 24 மணி நேரம், 30 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகளுக்குச் சமைத்து முடித்தார்.[4][5] தமிழகத்தின் 15 நகரங்களில் நடைபெற்ற தி இந்துவின் நமது மாநிலம் நமது சுவைப் போட்டியில் தாமோதரன் நடுவராகவும் இருந்தார்.[6]

திரை தோற்றங்கள் தொகு

திரைப்படங்கள் தொகு

வலைத் தொடர் தொகு

  • கல்யாணம் நிபந்தனைகள் பொருந்தும் (2018)

தொலைக்காட்சி தொடர் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Chef Damu selects best three winners". 28 July 2019. Archived from the original on 20 February 2020. பார்க்கப்பட்ட நாள் 20 February 2020.
  2. "World's longest dosa at over 48 ft sets Guinness record". 20 February 2012. Archived from the original on 21 February 2020. பார்க்கப்பட்ட நாள் 21 February 2020.
  3. "Chef Damu's Recipe For Success" (PDF). 11 July 2009. Archived from the original (PDF) on 12 July 2019. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  4. Vijayakumar, Chithira (22 December 2010). "Damu's day-long dhamaka!". Archived from the original on 20 February 2020. பார்க்கப்பட்ட நாள் 20 February 2020.
  5. "A Guide to the Cuisine of Tamil Nadu with Chef Damu ⋆ Greaves India". 3 August 2015. Archived from the original on 21 February 2020. பார்க்கப்பட்ட நாள் 21 February 2020.
  6. Kannadasan, Akila (31 August 2019). "How chef Damu went around Tamil Nadu in 60 days". Archived from the original on 20 February 2020. பார்க்கப்பட்ட நாள் 20 February 2020.
  7. "Chef Dhamu to make his Kollywood debut?". 10 August 2015. Archived from the original on 23 August 2022. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  8. "Cook, eat and act". 27 January 2016. Archived from the original on 23 August 2022. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  9. "Chef Dhamu on Adhu ldhuYedhu". The Times of India. 28 November 2015 இம் மூலத்தில் இருந்து 9 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200709022148/https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Chef-Dhamu-on-Adhu-ldhuYedhu/articleshow/49957995.cms. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமு_(சமையல்_கலைஞர்)&oldid=3840434" இலிருந்து மீள்விக்கப்பட்டது