தாரணிக்கள் (धारणी) என்பவை பொதுவாக பாளி, சமசுகிருதச் சொற்களைக் கொண்ட புத்த மந்திரங்கள், மனனக் குறிகள், வேள்விக் கோவைகள், ஓதற்கோவைகள்.[1][2][3] வரலாற்றுமுறையில் புத்த இலக்கியத்தின் பெரும் பகுதியாக உள்ளடங்கும் இவற்றை, புத்த மதப் பின்பற்றாளர்கள், தங்களைப் பாதுகாக்கக் கூடியதாகவும் தங்களுக்கு நற்பேற்றை அளிப்பதாகவும் கருதுகின்றனர், இந்தப் பொருளில் அவை பரித்தாக்கள் என்றும் வழங்கப்படுகின்றன.[4] பெரும்பாலானவை சமசுகிருதத்திலும் பாளியிலும் உள்ளன, சித்தம் போன்ற எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன, மேலும் சீனம், கொரியம், சப்பானியம், சிங்களம், தாய் மற்றும் வட்டார எழுத்துமுறைகளிலும் ஒலிபெயர்க்கப்பட்டுள்ளன.[5][6][7]

எட்டாம் நூற்றாண்டு மூலத்தின் பதினொன்றாம் நூற்றாண்டு புத்த பஞ்சராக்ச சுவடிப்படி. இந்த தாரணி கட்டுக்களைக் குறித்த செய்திகளையும், நற்பயன்களையும், பெண் தெய்வத்துக்கான சடங்குகளையும் கொண்டுள்ளது.

இந்தச் சொற்கோவை சடங்குகளிலும், சில செயல்கள் நடைபெற வேண்டியும் ஒதப்படும். மந்திரங்களும் தாரணியும் நெருங்கிய தொடர்புடையவை: சில சமயங்களில் ஒத்த பொருளுடைய சொற்களாகவே கருதப்படுகின்றன. எனினும் இவ்விரண்டின் பயன்பாடும் வேறு வேறு ஆகும்.

சொற்பிறப்பியல் தொகு

தாரணி (धारणी) என்றச் சொல் சமசுகிருத வேர்ச்சொல்லான திரு (धृ) என்பதில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. திரு என்றால் பெற்றிருத்தல், வைத்திருத்தல் என்று பொருள்.[1][8] எனவே தாரணி என்பது ஒரு சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் தன்னுள் அடக்கிய சொற்கோவை எனக் கருதலாம். தாரணிகள் பொதுவாக நன்மைகள் நடைபெறவும் இன்னல்களிலிருந்து விடுபடவும் புத்த மத பின்பற்றாளர்களால் ஓதப்படுகின்றன.

வேறுபாடு தொகு

 
இந்திய சித்தம் எழுத்துமுறையிலிருந்து சீன எழுத்துமுறைக்கு ஒலிபெயர்க்கப்பட்ட நிலந்தநாமஹிருதய தாரணி.

தாரணிகளையும் மந்திரங்களையும் வேறுபடுத்துதல் மிகவும் கடினம். அனைத்து மந்திரங்களையும் தாரணிகள் எனக்கொள்ளலாம் , ஆனால் அனைத்து தாரணிகளையும் மந்திரங்கள் எனக் கொள்ள இயலாது. மந்திரங்கள் பொதுவாக குறைவான அளவுடையவை, பெரும்பாலும் நேரடிப் பொருளற்ற எழுத்துக்களையும் சொற்களையும் கொண்டிருப்பவை. எடுத்துக்காட்டாக, ஹூம், பட், ஹ்ரீ, த்ராம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஜப்பானில் ஷிங்கோன் முறை புத்தத்தை நிறுவிய துறவி கூக்காய், புத்த மந்திரங்கள் எளிதில் விளங்கவியலா சடங்குகளில் (esoteric) காணப்படுபவை என்றும் தாரணிகள் எல்லா புத்த சடங்குகளிலும் காணப்படுபவை என்றும் வேறுபடுத்துகின்றார்.[9] கூக்காய் மந்திரங்களைத் தாரணிகளின் ஒரு சிறப்பு வகையாக கருதினார். அவரைப் பொறுத்த வரையில் தாரணியின் ஒவ்வொரு எழுத்தும் உண்மையின் வெளிப்பாடாகும்.[9]

எடுத்துக்காட்டு தொகு

அவலோகிதேஷ்வரரின் ஆர்ய ஏகா தசமுக தாரணி (பொருள்: உயரிய பதினோருமுக தாரணி. திபெத்தியர்களின் மஹாகருணா தாரணி

நமோ ரத்னத்ர்யாயே நம:
ஆர்யஜ்ஞான சாகர வைரோசன வ்யூஹராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்ஸம்புத்தாய:
நம: ஸர்வ ததாகதேப்ய: அர்ஹதேப்ய: சம்யக்ஸம்புத்தேப்ய:
நம: ஆர்ய அவலோகிதேஷ்வராய போதிசத்த்வாய மஹாசத்த்வாய மஹாகருனிகாய:
தத்யதா: ஓம் தர தர திரி திரி துரு துரு இதியே விதியே சலே சலே
ப்ராசலே குசுமே குசும்வரயே இலி மிலி ஜ்வாலம் அப்னயே ஸ்வாஹா

இவற்றையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Richard McBride (2004). Robert Buswell. ed. Encyclopedia of Buddhism. Macmillan Reference. பக். 21, 180, 217–218, 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-02-865718-9. https://books.google.com/books?id=L34YAAAAIAAJ. 
  2. Moriz Winternitz (1996). A History of Indian Literature: Buddhist literature and Jaina literature. Motilal Banarsidass. பக். 367–368. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0265-0. https://books.google.com/books?id=Lgz1eMhu0JsC. 
  3. Davidson 2009, ப. 101-102.
  4. Damien Keown; Charles S. Prebish (2013). Encyclopedia of Buddhism. Routledge. பக். 389. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-98588-1. https://books.google.com/books?id=NFpcAgAAQBAJ. 
  5. Helen J. Baroni (2002). The Illustrated Encyclopedia of Zen Buddhism. The Rosen Publishing Group, Inc. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8239-2240-6. https://books.google.com/books?id=smNM4ElP3XgC&pg=PA66. 
  6. Robert Gimello (2010). Phyllis Granoff and Koichi Shinohara. ed. Images in Asian Religions: Text and Contexts. University of British Columbia Press. பக். 229–231. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7748-5980-6. https://books.google.com/books?id=f22MMuUrOaUC. 
  7. Silvio A. Bedini (1994). The Trail of Time: Time Measurement with Incense in East Asia. Cambridge University Press. பக். 69–84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-37482-8. https://books.google.com/books?id=xdVkzs6iI1YC. 
  8. Braarvig, Jens (1985), p.19
  9. 9.0 9.1 Ryûichi Abé (1999). The Weaving of Mantra: Kûkai and the Construction of Esoteric Buddhist Discourse. Columbia University Press. பக். 159–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-52887-0. https://books.google.com/books?id=0ExNmHIACskC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரணி&oldid=3523032" இலிருந்து மீள்விக்கப்பட்டது