தாராசுரம்

தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணதில் இருக்கும் ஒரு பேரூராட்சி


தாராசுரம் (ஆங்கிலம்:Darasuram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு உலகப்பெற்ற ஐராவதேசுவரர் கோயில் உள்ளது. இது வணிக நகரமான கும்பகோணத்தின் புறநகர் பகுதி ஆகும்.

தாராசுரம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் கும்பகோணம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

15,787 (2011)

6,864/km2 (17,778/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2.3 சதுர கிலோமீட்டர்கள் (0.89 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/dharasuram

2021-இல் புதிய கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைத்தல் தொகு

 
ஐராவதேசுவரர் கோயில் கோபுரம்
 
ஐராவதேசுவரர் கோயில்
 
சோழர் கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஐராவதேசுவரர் கோயில்
 
தண்ணீர் சூழ்ந்த நிலையில் கோயில்
 
பெரிய நாயகி அம்மன் கோயில்

தாராசுரம் பேரூராட்சியை அக்டோபர், 2021-இல் புதிதாக நிறுவப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[4][5]

அமைவிடம் தொகு

தாராசுரம் பேரூராட்சி தஞ்சாவூரிலிருந்து 42 கிமீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

2.3 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,931 வீடுகளும் 15,787 மக்கள்தொகையும் கொண்டது.[7][8][9]

சப்தஸ்தானம் தொகு

சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.[10]

இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.[11]

வரலாற்றுச் சிறப்பு தொகு

 
ஐராவதேஸ்வரர் கோவில்

இவ்வூர் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.

இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.

பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

சான்றுகள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது
  6. தாராசுரம் பேரூராட்சியின் இணையதளம்
  7. http://www.townpanchayat.in/dharasuram/population
  8. Dharasuram Population Census 2011
  9. Dharasuram Town Panchayat
  10. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992
  11. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Darasuram
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராசுரம்&oldid=3795120" இலிருந்து மீள்விக்கப்பட்டது