தாராநல்லூர்

தாரா நல்லூர் என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டதின் தலைநகரான திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் இதயப் பகுதியான காந்தி சந்தை அருகில் அமைந்துள்ள ஒரு மக்கள் குடியிருப்பு பகுதி ஆகும்.

முற்காலத்தில் அதாவது மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் திருச்சி நகரத்தின் கீழ அரண் சாலையின் கிழக்கில் அமைந்த போர் வீரர்களின் குடியிருப்புப் பகுதியாகவும் ஆயுத தளவாட தொழிற்சாலைகளின் பகுதியாகவும் இந்தப்பகுதி விளங்கியுள்ளது.

மன்னர்கள் காலத்தில் தஞ்சையிலிருந்து திருச்சி வருபவர்களின் நுழைவாயிலாக, கோட்டையின் கொத்தளமாக தாராநல்லூர் விளங்கியதன் அடையாளமாக இன்றும் ஸ்ரீ கொத்தளத்து அலங்க முனீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. மேலும் மாகாளியப்பர் கோவில், சுப்புராயர் கோவில் , செல்லாயி அம்மன் கோவில் முதலானவையும் மக்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்கு உரிய இடங்களாக உள்ளன.

மேலும் " சுதேசி பங்களா " என பகுதி மக்களால் அழைக்கப் படும்

 Helana Blavatsky

( எலனா பெத்ரோவ்னா கான் ) அம்மையார் அவர்களால் துவங்கப்பட்ட The Theosophical society என அழைக்கப்படும் பிரம்ம ஞான சபையின் திருச்சி கிளை இந்த தாராநல்லூர் பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது மிக பெருமைக்குரியது ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராநல்லூர்&oldid=3773995" இலிருந்து மீள்விக்கப்பட்டது