திக்கி அரண்மனை

இந்திய கட்டடம்

திக்கி அரண்மனை (Diggi Palace) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் அமைந்துள்ள அரச குடும்பத்தினர் வாழ்ந்த ஓர் அரண்மனையாகும்.[1][2] இந்த அரண்மனை ஒரு பாரம்பரிய ஆடம்பர விடுதியாக மாற்றப்பட்டது. ஆனால் இதன் ஒரு பகுதியை இன்னும் அரச குடும்பம் ஆக்கிரமித்துள்ளது. இக்குடும்பமே விடுதியை நடத்துகிறது.[3] இங்கு ஆண்டுதோறும் செய்ப்பூர் இலக்கிய விழா 2006 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.[4][5]

வரலாறு தொகு

செய்ப்பூர் மாநிலத்தின் முந்தைய பகுதியான செய்ப்பூரில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ தொலைவில் உள்ள தனியார் மாளிகையான இந்த அரண்மனை, தாக்கூர் எனப்படும் கங்காரோட்டு இராசபுத்திரர்களுக்கு சொந்தமானதாகும்.[6] 1860 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டதில் இருந்து ஒவ்வொரு தாக்கூரும் கட்டுமனாப் பணியில் ஈடுபட்டு தற்போதைய கட்டமைப்பிற்கு அரண்மனை உருவாகியுள்ளது. இது 1991 ஆம் ஆண்டில் தற்போதைய உரிமையாளர்களான தாக்கூர் ராம் பிரதாப் சிங் திக்கியும் அவரது மனைவி ஜோதிகா குமாரி திக்கியும் இந்த அரண்மனையின் ஒரு பகுதியை பாரம்பரிய ஆடம்பர விடுதியாக மாற்றினர்.[7] திக்கி அரண்மனையின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. 1860 ஆம் ஆண்டில் பிரமாண்டமான திக்கி கோட்டைக்கு தலைமை தாங்கிய திக்கி சமத்தானத்தின் ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த சிறீரீ தாக்கூர் சாகேப்பு பிரதாப் சிங் திக்கி இந்த அரண்மனையை கட்டைனார். மேலும் சில ஆண்டுகளில் செய்ப்பூர் நகரம் 9 சதுரங்களில் கட்டப்பட்டது. திக்கி அரண்மனை தற்போதைய ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியக் இடத்தை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் பின்னர் இதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Not being at Diggi Palace". The Week. http://week.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/theWeekContent.do?tabId=13&programId=1073755417&categoryId=-1073908161&contentId=10917095. 
  2. "Review:Diggi Palace". The New York Times இம் மூலத்தில் இருந்து 2010-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100429173804/http://travel.nytimes.com/travel/guides/asia/india/rajasthan/jaipur/49007/diggi-palace/hotel-detail.html. 
  3. "Take me to the Jaipur palace". The Australian. 12 June 2010. http://www.theaustralian.com.au/travel/take-me-to-the-palace/story-e6frg8rf-1225877392724. 
  4. "Rushdie gag order highlights India's battle for free speech". Sydney Morning Herald. http://www.smh.com.au/world/rushdie-gag-order-highlights-indias-battle-for-free-speech-20120128-1qn4y.html. 
  5. "Jaipur Literature Festival: Literati glitterati weekend in India". CNNGo. 18 January 2010. http://www.cnngo.com/mumbai/sleep/literati-glitterati-weekend-jaipur-literature-festival-633106. 
  6. George Michell; Aman Nath (2005). Palaces of Rajasthan. Frances Lincoln. p. 55.
  7. "History". Archived from the original on 2012-01-05.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்கி_அரண்மனை&oldid=3781768" இலிருந்து மீள்விக்கப்பட்டது