திமிலை மகாலிங்கம்

திமிலை மகாலிங்கம் (ஏப்ரல் 29, 1938 - டிசம்பர் 13, 2010) 1960களில் புகழ்பெற்ற ஒரு ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இலக்கிய உலகில் கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, புதினம் என அனைத்திலும் எழுதியவர். சிறுவர் இலக்கியத்திலும், சில நூல்களை வெளியிட்டார்.

திமிலை மகாலிங்கம்
பிறப்புதங்கவேல்
ஏப்ரல் 29, 1938
மட்டக்களப்பு
இறப்புடிசம்பர் 13, 2010
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
உறவினர்கள்மனைவி சக்திராணி

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

இலங்கை, மட்டக்களப்பு மாவட்டம் திமிலைத் தீவில் பிறந்தவர் மகாலிங்கம். இவரது இலக்கிய வாழ்வுக்குத் துணை நின்றவர் இவரது மனைவி சக்திராணி.

அப்போதைய மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர். “தேனமுத இலக்கியமன்றம்” என்ற அமைப்பின் மூலம் பல நாடகங்களை அரங்கேற்றினார். தேனமுத இலக்கிய மன்றம், ஒரு வர்த்தக வகுப்பு மாணவர்களைக் கொண்டு உருவானது. தட்டச்சு இதில் முக்கியமாக இருந்தது. மட்றாஸ் கபேயின் மேல் மாடியில் இவ்வகுப்பு செயற்பட்டது. திமிலை மகாலிங்கம் அதன் முகாமைத்துவப் பணிப்பாளராக செயற்பட்டார். பல ஆண், பெண் இலக்கிய கர்த்தாக்கள் இவ்வகுப்பின் மூலம் உருவாகினர். பின்னால் அவருக்கு கிராம சேவை உத்தியோகம் கிடைத்தது. ஆனாலும் தேனமுத இலக்கிய மன்றம் தொடர்ந்து செயற்பட்டது.

விருதுகள் தொகு

  • தமிழ் மணி (இந்து கலாசார அமைச்சு)
  • கலாபூஷணம் (இந்து கலாசார அமைச்சு)

இவர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் நீண்டகால உறுப்பினர், 1993 முதல் பிரதேச செயலகம் நடத்திய கலாசார விழா தேனகம் சிறப்பு மலர் வெளியீடு, ஆகியவற்றில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளார். மேற்படி கலாசாரப் பேரவையினால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டுள்ளார். 20.12.2010 இல் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இவருக்கு “கலைச்சுடர்” விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

எழுதிய நூல்கள் தொகு

தளத்தில்
திமிலை மகாலிங்கம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • கனியமது (சிறுவர் பாடல்கள்)
  • மோதல் (சிறுகதைத் தொகுதி)
  • பாதை மாறுகிறது (நாவல்)
  • புள்ளிப்புள்ளி மானே (சிறுவர் கவிதை)
  • சிறுவருக்கு விபுலானந்தர் (சிறுவர் இலக்கியம்)
  • அவனுக்குத் தான் தெரியும் (நாவல்)
  • சிறுவருக்கு நாவலர் (சிறுவர் இலக்கியம்)
  • குருவிக்கு குஞ்சுகள் (சிறுவர் இலக்கியம்)
  • குழந்தையின் குரல் (சிறுவர் இலக்கியம்)
  • நம் நாட்டுப் பழமொழிகள்.

பத்திரிகைகளில் வெளிவந்த ஆக்கங்கள் தொகு

  • காதலோ காதல் (தினக்கதிர்)
  • நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வுண்டு (வீரகேசரி)
  • ஊஞ்சல் (மித்திரன்).

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிலை_மகாலிங்கம்&oldid=3216163" இலிருந்து மீள்விக்கப்பட்டது