திரிசா செட்டி (செயற்பாட்டாளர்)

திரிசா செட்டி [1] (Trisha Shetty) பிறப்பு 16 செப்டம்பர் 1990) பாலின சமத்துவத்திற்கான இந்திய ஆர்வலர் மற்றும் சீசேய்ஸ்சின் நிறுவனர் ஆவார். இவர் மனித உரிமைகள் வழக்காடலுக்காக அறியப்படுகிறார், குறிப்பாக பாலின உணர்வுக் கொள்கைகள் [2] மற்றும் சட்டம், தரமான கல்வி, இளைஞர்கள் மற்றும் பாலின பிரதிநிதித்துவம் மற்றும் இந்தியாவில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது ஆகியவை தொடர்பான வழக்காடலில் ஈடுபடுகிறார். இவரது பணி மற்றும் செயல்பாடுகளால் ஐக்கிய நாடுகள், [3] [4] ஜனாதிபதி ஒபாமா, [5] இவரது மாட்சிமை ராணி இரண்டாம் எலிசபெத் [6] மற்றும் ஜனாதிபதி இம்மானுவல் மாக்ரோன் ஆகியோரிடம் இருந்து அங்கீகாரம் பெற்றுள்ளார். [7] இவர் தற்போது ஸ்டீரிங் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார் [8] இது 2018 ஆம் ஆண்டில் பாரிசு சமாதான கருத்துக்களம், எனும் ஒரு சர்வதேச மாநாட்டில் இம்மானுவேல் மாக்ரோன் தலைமையின் கீழ் தொடங்கப்பட்டது. உலகளாவிய நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்காக இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அருங்காட்சியகத்தின் 8 உறுப்பினர்களைக் கொண்ட உலகளாவிய தலைமைத்துவ ஆலோசனை குழுவின் ஒரு பகுதியாக இவர் இருக்கிறார்.முன்னாள் ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் ; மற்றும் டேரன் வாக்கர்; தலைவர், ஃபோர்டு அறக்கட்டளை ஆகியோருடன் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார். [9] இந்தியாவின் "7 சக்திவாய்ந்த வீரர்களில்" ஒருவராக செட்டி பெயரிடப்பட்டார் மற்றும் வோக் இந்தியா உமன் ஆஃப் தி இயர் விருது வழங்கப்பட்டவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். [10] [11] கொலம்பியா பல்கலைக்கழகத்தில் [12] துவங்கப்பட்ட 12 ஒபாமா அறக்கட்டளை அறிஞர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார். 2019 ஆம் ஆண்டில் ஒரு டெட் (மாநாட்டில் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை ஒப்புக் கொண்டுள்ளார்.[13]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

செட்டி மும்பை, மகாராஷ்டிராவில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தின் ஜெய் ஹிந்த் கல்லூரியில் அரசியல் அறிவியல் மற்றும் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞராக பட்டம் பெற்றார். 2018 இல், இவர் ஒபாமா அறக்கட்டளைக்காகத் தேர்வு செய்யப்பட்டார் [14] ஒரு ஆண்டு சிறப்பு பயிற்சி, கல்வி மற்றும் வழிகாட்டுதலின் திட்டத்தில் பங்கேற்க நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் சென்றார். [15] ஒபாமா அறக்கட்டளையின் ஆலோசனையுடன் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்ட கல்வி, திறமை அடிப்படையிலான மற்றும் அனுபவக் கற்றலை ஒன்றிணைக்கும் ஒரு அதிவேகத் திட்டத்தில் பங்கேற்கும் திறமையான பன்னிரண்டு தலைவர்களைக் கொண்டு கூட்டமைப்பிற்காக இவர் தேர்வானர்.

தொழில் மற்றும் செயல்பாடு தொகு

செட்டி ஆகஸ்ட் 2015 இல் [16] சீ சேய்சு எனும் இயக்கத்தினை உருவாக்கினார். இது பல பரிமாண அணுகுமுறையின் மூலம் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான ஒரு இளைஞர் தலைமையிலான இயக்கமாகும். திரிசா தனது தனிப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் சீ சேய்சு எனும் இயக்கத்தினை நவம்பர் 2019 இல் தொடங்குவதற்கான காரணத்தினை தனது டெட் பேச்சு மூலம் பகிர்ந்து கொண்டார், "உங்கள் வடுக்களைத் தழுவுங்கள், உங்கள் சொந்த நாயகராக இருங்கள்" என்று கூறினார். [17] இவரது பேச்சு ஸ்டார் பிளஸ் மற்றும் ஸ்டார் வேர்ல்டு தொலைக்காட்சிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒளிபரப்பப்பட்டது. இவர் நடிகர், ஷாருக்கான் மற்றும் ஸ்டார் டிவி நெட்வொர்க்குடன் இணைந்து டெட் உருவாக்கிய சிறப்புத் தொடரின் ஒரு பகுதியாக இதில் கலந்து கொண்டார். [18] பேச்சு பல பிராந்திய இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது மற்றும் ஹாட்ஸ்டாரிலும் வெளியானது.[19]

சான்றுகள் தொகு

  1. Team, ELLE India. "Meet Trisha Shetty, whose NGO provides medical and legal support to rape survivors". Elle India (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-11-25. பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.
  2. "Women (And Men) Demand An End To India's Tax On Sanitary Pads". NPR.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  3. "Trisha Shetty, Young Leader for the SDGs, Keynote Address at ECOSOC Youth Forum 2017". Office of the Secretary-General’s Envoy on Youth (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-10.
  4. "Meet 17 Young People Leading the Way on the Sustainable Development Goals". unfoundation.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-10-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  5. Obama Foundation (2017-09-13), President Obama Announces The Obama Foundation Summit, பார்க்கப்பட்ட நாள் 2019-05-25
  6. "These are the three young Indians Queen Elizabeth II wants to meet". GQ India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  7. "Indian influencers from Club Young Leaders India-France on Paris visit". La France en Inde / France in India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-10.
  8. "Trisha SHETTY - Paris Peace Forum". parispeaceforum.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
  9. "7 most powerful warriors". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.
  10. "Presenting the winners: Vogue Women Of The Year 2018". VOGUE India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-28. பார்க்கப்பட்ட நாள் 2019-05-10.
  11. "Meet Trisha Shetty, the young activist fighting for equal representation". VOGUE India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-11-11. Archived from the original on 2019-05-10. பார்க்கப்பட்ட நாள் 2019-05-10.
  12. "About the Obama Foundation Scholars Program | Columbia World Projects". worldprojects.columbia.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
  13. Shetty, Trisha, Embrace your scars, be your own hero (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-06-25
  14. "Inaugural Group of Obama Foundation Scholars at Columbia University Announced". https://news.columbia.edu/obamascholars. பார்த்த நாள்: 2018-11-21. 
  15. "Columbia to host 12 Obama Foundation scholars aiming to solve global problems - Columbia Daily Spectator". www.columbiaspectator.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.
  16. "She Says | Home". www.shesays.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.
  17. "TED Talks season 2: Shah Rukh Khan drops teaser of India Nayi Baat which will leave you inspired!". CatchNews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
  18. Bhushan, Nyay (2019-10-03). "Disney's Star India Network Sets Season 2 of 'TED Talks India' Hosted by Shah Rukh Khan". The Hollywood Reporter (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
  19. Shetty, Trisha, Embrace your scars, be your own hero (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-06-25