திரிபுரேஸ்வரி கோயில்

திரிபுரேஸ்வரி கோயில் (Tripureswari temple), இந்திய மாநிலமான திரிப்புராவின் உதய்ப்பூரில் உள்ள 500 ஆண்டுகள் பழைமையான கோயில் ஆகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்று.[1]

தல வரலாறு தொகு

இந்த கோயிலின் கட்டுமானக் காலத்தில், அரசரான தான்ய மாணிக்காவின் கனவில் இறைவியான பகவதி தோன்றி, வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங்கில் உள்ள சிலையை எடுத்துவந்து பூஜிக்குமாறு பணித்தாள்.[1] இது 1501ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு காளி பூஜை கொண்டாடப்படுகிறது. விழாக்காலங்களில் கோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரேஸ்வரி_கோயில்&oldid=1973526" இலிருந்து மீள்விக்கப்பட்டது