திரிவிக்ரமன் தம்பி

மலையாள எழுத்தாளர்

முனைவர் திரிவிக்ரமன் தம்பி (1926-2008) கேரள நாட்டுப்புறவியல் ஆய்வாளர். நாட்டுப்புறவியலை அடிப்படையாகக் கொண்டு கேரள வரலாற்றை எழுதியவர்.

திரிவிக்ரமன் தம்பி கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் என்ற ஊரில் பிறந்தார். மலையாள இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றபின் திருவனந்தபுரம் கலைக்கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். குமரிமாவட்ட ஊர்ப்பெயர்கள் என்ற இவரது முனைவர்பட்ட ஆய்வு முக்கியமானது. அதன்பின் குமரிமாவட்ட நாட்டாரியல் ஆய்வில் நுழைந்தார்.

தெக்கன்பாட்டுகள் ஒரு ஆய்வு என்ற நூல் புகழ்பெற்றது. குமரிமாவட்டத்தின் வாய்மொழி வரலாற்றை மலையாளத்தில் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். வில்லுப்பாட்டுகளை பதிப்பித்தார். 2008ல் நாகர்கோயில் பார்வதிபுரத்தில் தன் 82 ஆவது வயதில் காலமானார்.

நூல்கள் தொகு

  • தெக்கன் கேரள ஸ்தல நாமங்ஙள்
  • இரவிக்குட்டிப்பிள்ளை போரு
  • தம்பிமார்கதை
  • வேலுத்தம்பி தளவா
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவிக்ரமன்_தம்பி&oldid=2715173" இலிருந்து மீள்விக்கப்பட்டது