திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனம்

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனம் இலங்கை உயர் கல்வி அமைச்சின் கீழுள்ள, இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (சிலியட்) உள்ள பல உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாகும். இது திருகோணமலையிலுள்ளது. 1995 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்ட இலக்கம் 29 இன் பிரகாரம் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் கீழ் 12 உயர் தொழில்நுட்ப நிறுவனங்களும் 8 உயர் தொழில்நுட்ப நிறுவனப் பகுதிகளும் உள்ளன. 2007 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் முதல், திருகோணமலை நகரத்திலிருந்து 7 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள வரோதயநகர் என்ற இடத்தில் கன்னியா வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தில் இயங்குகின்றது. இந்த நிறுவனத்தில் 3 கற்கை நெறிகள் முழு நேர மற்றும் பகுதிநேர மாணவர்களுக்கு என்று இருக்கின்றது. அவை வருமாறு,

  1. உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (எச்.என். டி. எ.)
  2. உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (எச்.என். டி. ஈ.)
  3. உயர் தேசிய தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா (எச்.என். டி. ஐ .டி)
திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனம் இலங்கை

வெளியிணைப்புக்கள் தொகு

  1. http://www.trincoati.com/
  2. https://www.facebook.com/ATI-Trincomalee-595061423864830/