திருக்கோட்டியூர்


திருக்கோட்டியூர் எனப்படும் திருகோஷ்டியூர் (ஆங்கிலம்:Thirukoshtiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில்[4] அமைந்துள்ள ஊர் ஆகும். இதன் ஊராட்சி திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது [5]. இவ்வூர் திருப்பத்தூரிலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது.

திருகோஷ்டியூர்
திருகோஷ்டியூர்
இருப்பிடம்: திருகோஷ்டியூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°04′N 78°34′E / 10.06°N 78.56°E / 10.06; 78.56
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் திருப்பத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூரின் சிறப்பு தொகு

இங்கு பிரசித்திபெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் வரிசையில் இத்தலமும் இடம்பெற்றுள்ளது.

பெயர்க்காரணம் தொகு

முக்கடவுளரும், தேவர்களும், ரிஷிகளும் கூடி ஹிரண்யகசிபுவைக் கொல்லும் உபாயத்தைக் கண்டறிந்த இடமாக இத்தலம் கருதப்படுகிறது. கோஷ்டி (கூட்டம்) சேர்ந்த இடமாக அமைந்தமையால் இத்தலம் திருக்கோஷ்டியூர் என அழைக்கப் பெற்றது. கூட்டத்தின் முடிவின்படி, மஹாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து ஹிரண்யகசிபுவை அழித்தார்.

ஸ்ரீ சௌம்ய நாராயண பெருமாள் திருக்கோவில் தொகு

இங்கு அமைந்த திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் நான்கு புறமும் பெருமதில்கள் சூழ்ந்த, உயர்ந்த இராஜகோபுரத்தோடமைந்த பெருங்கோவிலாகும். பெருமாளின் நின்ற, நடந்த, இருந்த முக்கோலங்களும் அமைந்துள்ளது இக்கோவிலின் சிறப்பாகும்.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோட்டியூர்&oldid=3558106" இலிருந்து மீள்விக்கப்பட்டது