திருநெல்வேலி படுகொலைகள்

திருநெல்வேலி படுகொலைகள் (Thirunelveli massacre) என்பது 1983, சூலை 24, 25 காலப் பகுதியில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அந்நாட்டுப் படைத்துறையால் 51 வரையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். யூலை 23, 1983 இலங்கைப் படைத்துறையினரின் இரவு நேர வீதிப்பாதுகாப்பு நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடியில்[1] சிக்கி பதின்மூன்று இராணுவத்தினர் இறந்ததைத் தொடர்ந்து பலாலி, சிவன் அம்மன் கிராம், ஆகிய பகுதிகளில் புகுந்த இலங்கைப் படைத்துறை தமிழர்களைப் படுகொலை செய்தது. [2]

திருநெல்வேலி படுகொலைகள்
திருநெல்வேலி படுகொலைகள் is located in இலங்கை
திருநெல்வேலி படுகொலைகள்
இடம்திருநெல்வேலி (இலங்கை)
ஆள்கூறுகள்9°41′16.82″N 80°1′42.56″E / 9.6880056°N 80.0284889°E / 9.6880056; 80.0284889
நாள்24 யூலை 1983
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழப் பொதுமக்கள்
இறப்பு(கள்)60+
காயமடைந்தோர்100 இக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
தாக்கியோர்இலங்கை தரைப்படை

மேற்கோள்கள் தொகு

  1. இதுவே தமிழீழ விடுதலைப்புலிகளால் இலங்கை இரானுவத்துக்கெதிரான முதலாவது பெரிய தாக்குதலாகும்..
  2. Lest we forget. Massacres of Tamils: 1956-2001, Part1. Kilinochi: NESOHR